இந்திய ரிசர்வ் வங்கி 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் விதிமுறைகளை மீறியதற்காக வங்கிகள், என்பிஎஃப்சி அமைப்புகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு சுமார் 40.39 கோடி ரூபாய் அளவிலான அபராதத்தை விதித்துள்ளது என்று நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் தெரிவித்தார்.
மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டது, இந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கி சுமார் 176 வழக்குகளில் (விதிமீறல்கள் தொடர்பான வழக்கு) கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே ரூ.14.04 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் நிதி பாதுகாப்பை மேம்படுத்த ஆர்பிஐ கடுமையான நடவடிக்கையும், ஆய்வுகளையும் அனைத்து நிதி நிறுவனங்களில் கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. இதில் அதிகமாக விதிமுறைகள் மீறல், நிர்வாக குறைபாடு, மோசமான நிதி நிலைமை ஆகியவற்றை கொண்டு இருந்தது கூட்டுறவு வங்கிகள் தான்.
கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.14.04 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தனியார் துறை வங்கிகளுக்கு ரூ.12.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.65 கோடியும், வெளிநாட்டு வங்கிகள் ரூ.4.65 கோடியும், என்பிஎஃப்சிகள் ரூ.4.39 கோடியும் அபராதமாக செலுத்தியுள்ளன.
வங்கிகள், NBFCகள் மற்றும் HFCக்கள் தங்களுடைய வர்த்தகத்தையும், நிதி ஆதாரத்தையும் எப்படி கையாள வேண்டும், நியாயமான நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை ஆர்பிஐ வெளியிட்டது. இதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் வழங்குதலின் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியது.


Click it and Unblock the Notifications