இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படுகிறது. வங்கிகள் விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுகிறதா, அவற்றின் கணக்குகள் முறையாக உள்ளதா என்பதை ரிசர்வ் வங்கி அடிக்கடி ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது. இதனால்தான் நம் நாட்டில் நிதித் துறை சிறப்பாக செயல்படுகிறது.
கண்காணிப்பு
அதேசமயம் என்னதான் ரிசர்வ் வங்கி வங்கிகளை கண்காணித்தாலும் சில சமயங்களில் சில வங்கிகள் விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்படுகின்றன மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் செயல்படுகின்றன. ஆனால் இறுதியில் ரிசர்வ் வங்கியிடம் மாட்டி கொள்கின்றன. தவறு செய்யும் வங்கிகளுக்கு எதிராக அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்கிறது.

தற்போது சில ஒழுங்குமுறை விதிமுறைகளை பின்பற்றாததற்காக டாய்ச் பேங்க் ஏஜி இந்தியா மற்றும் யெஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. டாய்ச் பேங்க் ஏஜி இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வங்கிகள் முழுவதும் பெரிய கடன்கள குறித்த மத்திய தகவல் களஞ்சியத்தை உருவாக்குதல் குறித்த சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக டாய்ச் பேங்க் ஏஜி இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
விதிமீறல்
மற்றொரு விதிமீறல் விவகாரத்தில் யெஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.29.60 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நிதி அறிக்கைகள் வழங்குதல் மற்றும் வெளிப்படுத்தல்கள் குறித்து தனது சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக யெஸ் வங்கிக்கு ரூ.29.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும், ஒழுங்குமுறை இணக்க குறைபாடுகள் அடிப்படையாக கொண்டு அபராதங்கள் விதிக்கப்படுகிறது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் செய்து கொண்ட எந்தவொரு பரிவர்த்தனைகள் அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடித்தன்மையையும் தீர்ப்பதற்காக அல்ல. அபராதம் விதிப்பது வங்கிகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படக்கூடிய வேறு எந்த நடவடிக்கைக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சந்திப்பு
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முடிவடைந்த போது, யெஸ் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.14 சதவீதம் உயர்ந்து ரூ.21.54ஆக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் வங்கி தலைவர்களை சந்தித்து பேச உள்ளது. அப்போது, நிதி அமைப்பில் நிதியை நிர்வகிக்கும் விதத்தில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து அவர்களுடன் ரிசர்வ் வங்கி விசாரிக்கும்.
ஏனென்றால், தனது வட்டி விகித முடிவுகள் பரந்த பொருளாதாரத்திற்கு திறம்பட நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி முயற்சி செய்கிறது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில் நியமிக்கப்பட்ட துணை கவர்னர் பூனம் குப்தா உள்பட இந்திய ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள் மே 21ம் தேதியன்று வங்கி நிர்வாகிகளை சந்திப்பார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications