இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் தீவிரமாகக் கண்காணித்து வரும் ரிசர்வ் வங்கி, எஸ்பிஐ செய்த ஒரு வர்த்தக முறைகேட்டை கண்டுபிடித்து சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது.
இந்திய வங்கிகளில் அடுத்தடுத்து பல வர்த்தக முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளது வெளியாகி வரும் நிலையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் நிர்வாகப் பணிகள் முதல் கணக்கு வழக்குகள், வங்கி நடைமுறைகளை கடைப்பிடிப்பது வரையில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தக் கண்காணிப்பில் இதுவரை பல வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சிக்கியது உண்டு. தற்போது இதில் எஸ்பிஐ வங்கியும் சிக்கியுள்ளது.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கியின் முக்கிய வர்த்தகப் பிரிவாக விளங்கும் கடன் வர்த்தகத்தில் ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரிசர்வ் வங்கியில் செய்த சோதனையில் இது தெரிய வந்துள்ளது.
30 சதவீத கடன்
அதாவது எஸ்பிஐ ஒரு நிறுவனத்திற்கு paid-up share capital-க்கு 30 சதவீதத்திற்கும் அதிகமான கடன் அளிக்கும் போது அந்த நிறுவனத்தின் பங்குகளை அடமானமாகப் பெற்றுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு முறனானது. இந்த முறைக்கேடுக்காக ரிசர்வ் வங்கி சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான அபராதத்தை விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆய்வு
எஸ்பிஐ வங்கியின் மார்ச் 21, 2018 மற்றும் மார்ச் 31, 2019 காலகட்டத்தின் முடிவின் நிதி நிலையை ஆய்வு ரிசர்வ் வங்கி ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் 30 சதவீதத்திற்கும் அதிகமான கடன் அளிக்கும் நிறுவனத்தின் பங்குகளை அடமானமாகப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது ரிசர்வ் வங்கியின் பிரிவு 19 துணை பிரிவு 2 விதிமுறையை மீறியுள்ளது என ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.
விதிமீறல்
இந்த விதிமீறல்-க்காக ஆர்பிஐ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மீது சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான அபராதத்தை விதித்துள்ளது. இந்த விதிமீறல் மூலம் வங்கிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை, ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications