இந்திய வங்கிகள் அனைத்து ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவில் பல வங்கிகளில் கடன் மற்றும் நிர்வாக மோசடி செய்யப்பட்டு வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு முறைகேடுகளுக்கும் கடுமையான அபராதம் விதித்து வருகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி திருச்சூர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயக்கும் தனலட்சுமி வங்கி DEA பண்ட் விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காத காரணத்திற்காகச் சுமார் 27.5 லட்சம் ரூபாய் அளவிலான அபராதத்தை விதித்துள்ளது.

இதேபோல் கோரக்பூர்-ஐ சேர்ந்த என்ஈ & ஈசி ரயில்வே ஊழியர்களின் கூட்டுறவு வங்கி ஆர்பிஐ வரைமுறைகள் முழுமையாகப் பூர்த்திச் செய்யாத நிலையில் இவ்வங்கியின் மீதும் 20 லட்சம் ரூபாய் அளவிலான அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது என ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது
இந்த அபராதத்தைத் தனித்தனி அறிக்கையாக ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் கர்நாலா நகரி சஹாகாரி வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இவ்வங்கியில் வாடிக்கையாளர்களின் டெப்பாசிட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கக் கூடப் போதிய பணம் இல்லாத காரணத்தால் கர்நாலா நகரி சஹாகாரி வங்கி தனது சேவைகளைத் தொடர உரிமத்தை ரத்து செய்து தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
அபராதங்கள் மட்டும் அல்லாமல் நிதி நிலை மோசமாக இருக்கும் வங்கிகளைத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டும் வருகிறது ரிசர்வ் வங்கி இந்தக் கண்காணிப்பில் சிக்கியது தான் கர்நாலா நகரி சஹாகாரி வங்கி.
வங்கி இயங்க தடை விதிக்கப்பட்ட நிலையில் கர்நாலா நகரி சஹாகாரி வங்கியில் டெப்பாசிட் செய்துள்ள 95 சதவீதம் பேருக்கு DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் மூலம் 5 லட்சம் வரையிலான தொகை டெப்பாசிட் செய்துள்ளவர்கள் அனைவருக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications