இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் நிதிநிலையை பாதுகாக்கவும், வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். அவ்வாறு பின்பற்றாமல் விதிமுறைகளை மீறும் வங்கிகளின் மீது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் நைனிடால் பேங்க் மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் மற்றும் ஸ்ரீராம் பைனான்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் வாடிக்கையாளர் சேவை தொடர்பான ஆர்பிஐ-யின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதற்காக நைனிடால் பேங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 61.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கடன் வழங்கியதில் கடன் மற்றும் முன்பணம் ஆகியவற்றில் சட்ட ரீதியான சில விஷயங்களை பின்பற்ற தவறியதற்காக உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கிக்கு 6.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸுக்கும் ரூ. 5.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது. KYC வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட சில விதிகளைப் பின்பற்றாததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் இரண்டு நிதி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து ஆர்பிஐ அறிவித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் ரெயின்போ பைனான்ஸ் இந்தியா லிமிடெட் போன்ற நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த PVP கேபிட்டல் லிமிடெட் மற்றும் ரெயின்போ பைனான்ஸ் இந்தியா ஆகியவற்றின் உரிமம் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டன. பிவிபி கேப்பிட்டல் முதன்முதலாக 2002-ஆம் ஆண்டின் மே 23-ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது. அதேபோல ரெயின்போ ரெயின்போ பைனான்ஸ் இந்தியா 1998-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது.
ஆர்பிஐ வகுத்த விதிமுறைகளை மீறி செயல்படும் எந்த ஒரு வங்கியாக இருந்தாலும் அதற்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது உரிமம் ரத்து செய்யப்படலாம். உதாரணமாக விதிகளை மீறி சேவை வழங்குவது, வாடிக்கையாளரின் பணத்தை வேறு விஷயங்களுக்காக தவறாக பயன்படுத்துவது போன்றவை இந்த விதி மீறல்களில் அடங்கும்.


Click it and Unblock the Notifications