ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று 8 தேதி கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழையும் என்ற அச்சத்தை தொடர்ந்து கடந்த வாரம் புதன்கிழமை அந்நாட்டின் மத்திய வங்கி வேலைவாய்ப்பு எண்ணிக்கை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.
இதனால் இன்று ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை முடிவில் வட்டி உயர்வுக்கு 50:50 சான்ஸ் இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் ரெப்போ விகிதம் உயர்ந்துள்ளது.
ஆர்பிஐ கவர்னர்
ஆர்பிஐ கவர்னர் 10 மணிக்கு நேரலை மூலம் இரு மாத நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்ட நிலையில், அடுத்த இரு மாதத்திற்கு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
சக்திகாந்த தாஸ்
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் டிசம்பர் மாதம் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவித்தார். டிசம்பர் மாதம் கூட்ட முடிவில் SDF விகிதம் 6 சதவீதமாகவும், MSF 6.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது
கடனுக்கான வட்டி விகிதம்
இந்த உயர்வின் மூலம் வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ஆர்பிஐ கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்பரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் வரையில் அனைத்திற்கும் வட்டி அதிகரிக்கும். வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் கட்டாயம் கடன் வாங்கியோரின் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
2022 வட்டி விகிதம்
ஆர்பிஐ 2022 ஆம் ஆண்டில் 5 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த 5 முறை வட்டி விகித உயர்வில் ரெப்போ விகிதம் 2.25 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உள்ளது.
டிசம்பர் மாத கூட்டத்தில்
ரெப்போ விகிதம்: 6.25%
SDF விகிதம்: 6.00%
MSF விகிதம்: 6.50%
வங்கி விகிதம்: 6.50%
Reverse Repo Rate: 3.35%
CRR: 4.50%
SLR: 18.00%
முக்கியமானது
2023 ஆம் ஆண்டில் முதல் முறை இரு மாத நாணய கொள்கை கூட்டம் மட்டும் அல்லாமல் மத்திய பட்ஜெட்-க்குப் பின் நடக்கும் நாணய கொள்கை கூட்டம் என்பதால் இக்கூட்டத்தின் முடிவுகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications