சென்னை: அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பல வருடங்களுக்குப் பின்பு தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கும் வேளையில் இந்திய ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தைக் குறைக்குமான என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை நிர்ணயம் செய்யும் நாணய கொள்கை குழு-வின் (MPC) கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி நடத்த உள்ளது.
இதேவேளையில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் நாணய கொள்கை குழு-விற்கு புதிதாக வெளிப்புற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களின் வருகை ரெப்போ விகிதத்தை நிர்ணயம் செய்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதிதாக வரும் நபர்களின் பரிந்துரை, தகவல்கள், ஆய்வுகள் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யும் போது முக்கியமான டிரைவிங் ஃபோர்ஸ் ஆக இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழுவில் மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ளனர், இதில் 3 பேர் ஆர்பிஐ ஊழியர்கள், மீதமுள்ள 3 பேர் வெளி உறுப்பினர்கள் ஆவார். இந்த 6 உறுப்பினர்களைக் கொண்ட நாணய கொள்கை குழு தான் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கும், அதிகரிப்பதற்கும் பொறுப்பானது. ராம் சிங், நாகேஷ் குமார் மற்றும் சௌகதா பட்டாச்சார்யா ஆகியோர் மூன்று பதிய வெளிப்புற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். யார் இவர்கள்..?
ராம் சிங்: இந்திய நிதியியல் உலகில் மிகவும் மதிப்புமிக்க பொருளாதார நிபுணர் மற்றும் கல்வியாளர் தான் டாக்டர் ராம் சிங். தற்போது டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிஸ் கல்லூரியின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கொள்கை வகுத்தல் போன்றவற்றில் சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
சிங், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். டெல்லி ஸ்கூல் ஆப் பப்ளிக் பாலிசி அண்ட் கவர்னென்ஸ் கல்லூரியின் டைரெக்டராகவும், வேளாண் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என்ற பல முக்கிய தலைமைப் பதவிகளை வகித்துள்ளார் ராம் சிங்.
நாகேஷ் குமார்: நாட்டின் முக்கியமான பொருளாதார நிபுணரான டாக்டர் நாகேஷ் குமார், ரிசர்வ் வங்கியின் MPC குழுவில் இணைந்துள்ளார். தற்போது நாகேஷ் குமார், தொழில்துறை வளர்ச்சிக்கான ஆய்வுக் கழகத்தின் (ISID) இயக்குநராகவும் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றி வருகின்றார். இதோடு சர்வதேச பொருளாதாரம் மற்றும் கொள்கை பற்றிய பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார் நாகேஷ் குமார்.
ISID பணியில் சேர்வதற்கு முன்பு, நாகேஷ் குமார் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்திற்கான (UNESCAP) முதன்மை பொருளாதார நிபுணராக இருந்தார். இதேபோல் மேக்ரோஎக்னாமிக்ஸ் பாலிசி-யின் இயக்குநராகவும் இருந்தார்.
சௌகதா பட்டாச்சார்யா: 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பொருளாதார நிபுணரான சௌகதா பட்டாச்சார்யா, ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் MPC குழுவில் இணைந்துள்ளார்.
சௌகதா பட்டாச்சார்யா இதற்கு முன்பு ஆக்சிஸ் வங்கியில் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் நிர்வாக துணைத் தலைவராக பணியாற்றினார், அங்கு அவர் நிதி சந்தைகள் மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் பிரிவில் நிபுணராக இருந்தார். மேலும், பிரதமரின் உள்கட்டமைப்பு குழுவிற்கு IDFC சார்பாக முக்கிய பங்கு வகித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications