மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநர் பொறுப்புக்கு பொறுப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கக்கூடிய மைக்கேல் பத்ராவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனை அடுத்து அந்த பதவி காலியாவதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதியிட்டு ரிசர்வ் வங்கி சார்பில் இது தொடர்பான விளம்பரம் வெளியாகி உள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பொறுப்புக்கான தகுதிகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

என்னென்ன தகுதிகள்?: வரும் 15.1.2025 ஆம் தேதி அன்று 60 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
பொது நிர்வாகத்தில் அரசிலோ அல்லது செயலாளர் அளவிலோ குறைந்தது 25 ஆண்டுக்கால அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது இந்தியா அல்லது சர்வதேச பொது நிதி நிறுவனங்களில் குறைந்தது 25 ஆண்டுக்கால அனுபவம் வேண்டும் அல்லது தேசிய அல்லது சர்வதேச அளவில் மிகப்பெரிய மெரிட் அல்லது டிரேக் ரெக்கார்ட் வைத்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு மாத சம்பளம் 2,25,000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலம்: இந்த பதவிக்காலம் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்றும் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: துணை ஆளுநர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியாக நவம்பர் 30ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் பிற விவரங்கள் மற்றும் மூன்று ரெஃபரன்ஸ்களோடு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த https://financialservices.gov.in/ மற்றும் https://rbi.org.in/ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கக்கூடிய மைக்கேல் பத்ரா ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். இவர் 1985ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் நிதி கொள்கை குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டிலேயே இவரது பதவிக்காலம் முடிவடைந்தது, இருந்தாலும் அடுத்த ஓராண்டு காலத்திற்கு இவரது பதவி நீட்டிக்கப்பட்டது. ஐஐடி மும்பையில் பொருளாதாரப் பிரிவில் பிஎச்டி படிப்பை முடித்தவர் சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவுக்கான மூத்த ஆலோசகராக இவர் பணியாற்றியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பொறுப்பு என மிகவும் முக்கியமானது என்பதால் மிகவும் கவனத்துடனே அந்த பதவிக்கான நபர் தேர்வு செய்யப்படுவார்.


Click it and Unblock the Notifications