நாம் வாழும் இந்த டிஜிட்டல் யுகத்தில் செல்லுமிடமெல்லாம் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை. பேடிஎம், ஜிபே, போன்பே செயலிகளை கொண்டு நாம் எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது.
கடைகளில் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்துவது, டிக்கெட் புக் செய்வது, ரீசார்ஜ்கள் என அனைத்துமே உள்ளங்கையில் அடக்கம். இப்படி டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் தடைக்கு காரணம் என்ன?: இந்தியாவில் பண மதிப்பிழப்பு மற்றும் லாக்டவுன் காலங்களில் பேடிஎம் நிறுவன டிஜிட்டல் வங்கி சேவைகள் விரிவடைய தொடங்கின. ஆனால் தொடக்கம் முதலே ரிசர்வ் வங்கிக்கும் , பேடிஎம் நிறுவனத்துக்கும் மோதல் போக்கே நீடித்து வந்துள்ளது.
பேடிஎம் செயலி மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, கடன் வழங்குதல் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை சார்ந்த சேவைகளை செய்து வருகிறது பேடிஎம் பேமெண்ட்ஸ் லிமிடெட். இந்நிலையில் 2022 மார்ச் மாதம் 11ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், பிரிவு 35A வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949இன் கீழ் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதாக தெரிவித்தது.
கணக்கு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்து விரிவான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க தணிக்கையாளர் குழுவையும் நியமித்தது. இதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் லிமிடெட் செயல்பாட்டுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
பேடிஎம் வாடிக்கையாளர்கள் என்ன பிரச்சனை?: பிப்ரவரி 29, 2024 க்கு மேல் பேடிஎம் பேமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முக்கியமான செயல்பாடுகளை முடக்க உள்ளது ஆர்பிஐ. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு காரணமாக, பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருக்கும் வைப்பு நிதியை திரும்ப எடுக்கும் நிலை உருவாகும்.
குறிப்பாக வாடிக்கையாளர்களின் சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்பு கணக்குகள், சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் மற்றும் பிற சேவைகள் பாதிக்கப்பட உள்ளதால், இக்கணக்குகளில் உள்ள பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பிப்ரவரி 29 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 29க்கு மேல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் கணக்குகளிலும் பணம் செலுத்தவோ, வரவு வைக்கவோ அல்லது பணப்பரிவர்த்தனை செய்யவோ முடியாது. ஆனால், பேடிஎம் நிறுவனத்தின் யுபிஐ மூலம் பரிவர்த்தனைகளை செய்ய எந்த தடையும் இல்லை.
பேடிஎம் செயலியை பயன்படுத்த முடியாதா?: ரிசர்வ் வங்கியின் உத்தரவால், பேடிஎம் வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும். அதேநேரத்தில் பேடிஎம் செயலியை பயன்படுத்தி யுபிஐ, போன்ற சேவைகளை எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம்.
பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் உடனடியாக அதனை முடித்து கொள்ள வேண்டும். வியாபாரிகள் பேடிஎம்மில் இருந்து மற்ற சேவைக்கு மாற வேண்டும்.
பேடிஎம் யுபிஐ என்றால் என்ன?: பேடிஎம் செயலியில் யுபிஐ மட்டுமே பயன்படுத்துவர்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. உங்களுக்கு எஸ்பிஐ, இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ போன்ற வங்கிகளில் கணக்கு உள்ளது. அதை பேடிஎம் செயலியில் இணைத்து யுபிஐ சேவைக்காக பயன்படுத்தி வருகிறீர்கள் எனில் அதற்கு எந்த தடையும் இல்லை.
பேடிஎம் வங்கியில் இணைந்து பேடிம் வாலெட் போன்றவற்றில் பண பரிமாற்றம், கடன் வாங்குதல் போன்ற செயல்பாடுகளை செய்ய முடியாது. எனவே இரண்டிற்குமான வேறுபாட்டினை புரிந்து கொள்வது அவசியம்.
என்ன செய்ய போகிறது பேடிஎம்?: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து தர நிறுவனங்கள் பேடிஎம் பங்கு மதிப்புகள் குறையும் என கணிப்பை வெளியிட்டுள்ளன.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி , ரிசர்வ் வங்கியின் குற்றச்சாட்டுகளுக்கு முறையாக விளக்கமளித்து பிரச்னைகளை சரி செய்து மீண்டும் சந்தைக்கு வர இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என சொல்லப்படுகிறது. அப்போது மீண்டு வந்து வாடிக்கையாளர்களை பிடித்து பிரதான சேவை வங்கியாக மாறுவது நிச்சயம் கடினம் என்கின்றனர் நிபுணர்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications