கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் டோக்கனைசேஷன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்து வருகிறது.
டோக்கனைசேஷன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது பாதுகாப்பாக இருக்கும் என்றும் எந்தவித முறைகேடுகளும் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
டோக்கனைசேஷன் என்றால் என்ன? அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
டோக்கனைசேஷன்
நீங்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது, உங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தகவலை இ-காமர்ஸ் தளத்துடன் பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்று தான். இந்த தகவல்கள் சேமிக்கப்படுவதால் முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே தான் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டுகளை டோக்கனைஸ் செய்ய வேண்டும் என ஊக்குவித்து வருகிறது.
தகவல்கள் சேமிப்பு
தற்போது, ஆன்லைன் கார்டு பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள பல வணிகர்கள், எதிர்காலத்தில் சுமூகமான பரிவர்த்தனைகளை செயல்படுத்த, கார்டு-ஆன்-ஃபைல் (CoF) என அழைக்கப்படும் வாடிக்கையாளர்களின் கார்டு தகவல்களை அதாவது கார்டு எண், காலாவதி தேதி போன்ற முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துள்ளனர். இந்த தகவல்களை சேமித்து கொண்டால் வாடிக்கையாளர்கள் மீண்டும் அதே கார்டை பயன்படுத்தும்போது சிவிவி எண் மற்றும் ஓடிடி எண் ஆகிய இரண்டை மட்டும் பதிவு செய்தால் போதும். இதுவொரு எளிய பரிவர்த்தனைக்கு உதவுகிறது.
முறைகேடுக்கு வாய்ப்பு
ஆனால் அதே நேரத்தில் சேமித்து வைக்கப்படும் விவரங்களை பயன்படுத்தி முறைகேடு செய்யும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ரிசர்வ் வங்கி, டோக்கனைசேஷன் என்ற வழிமுறையை கொண்டு வந்துள்ளது. டோக்கனைசேஷன் என்பது 16 இலக்க பிளாஸ்டிக் அட்டை எண்கள், பெயர்கள், காலாவதி தேதிகள் ஆகிய தகவல்களை கொண்ட டோக்கன் ஆகும்.
இனி சேமிக்க முடியாது
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி டோக்கனைசேஷன் செய்த வாடிக்கையாளர்களின் கார்டு தகவல்களை வணிகர்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் இனி சேமிக்க முடியாது. அவர்கள் டோக்கன்கள் மூலம் மட்டுமே பரிவர்த்தனைகளை இயக்க முடியும். இதனால் உங்கள் ரகசிய தகவல்கள் வெளியாகாமல் பாதுகாக்கப்படும்.
டோக்கனைசேஷனை உருவாக்குவது எப்படி
1. உங்களுக்கு தேவையானதை ஷாப்பிங் செய்யும்போது, அந்த இணையதளத்தில் வாங்கிய பொருட்களுக்கான கட்டண முறையை தேர்ந்தெடுக்கும்போது, உங்களுக்கு விருப்பமான வங்கியின் கிரெடிட்/டெபிட் கார்டை பணம் செலுத்தும் முறையை பார்த்து அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.
2. "உங்கள் கார்டைப் பாதுகாக்கவும் அல்லது ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி கார்டை சேமி என்ற ஒரு ஆப்ஷன் அதில் இருக்கும்.
3. பரிவர்த்தனையை முடிக்க உங்கள் வங்கி அல்லது கார்டு நிறுவனத்திடமிருந்து உங்கள் மொபைலில் OTP அல்லது மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
4. இதனையடுத்து உங்கள் அட்டை தரவுக்கு பதிலாக உங்களுக்கு என ஒரு டோக்கன் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும். இந்த டோக்கன் மூலமாக மட்டுமே பரிவர்த்தனை நடக்கும்.
கடைசி 4 இலக்கங்கள்
எதிர்காலத்தில், உங்கள் கார்டின் கடைசி 4 இலக்கங்களை அங்கீகரிப்பதன் மூலம் அதே இணையதளத்தில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த டோக்கனை பயன்படுத்தி தொடர்ந்து பொருட்கள் வாங்கலாம். ஆனால் அதே நேரத்தில் இந்த டோக்கனை வேறு எந்த இ-காமர்ஸ் இணையதளத்திலும் பணம் செலுத்த பயன்படுத்த முடியாது.
டோக்கனை விரும்பாதவர்கள் என்ன செய்யலாம்?
டோக்கனை உருவாக்க விரும்பாதவர்கள், பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது கார்டு விவரங்களை கையால் குறிப்பிட்டு பரிவர்த்தனை செய்யலாம். ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, செப்டம்பர் 30, 2022க்குள் அனைவரும் டோக்கனைஸ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை கையாளவும், மாற்று வழிமுறைகளை செயல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications