அதானி ஹிண்டர்ன்பர்க் பிரச்சனை.. 20 நிறுவனங்களை உன்னிப்பாக கவனித்து வரும் RBI!

அதானி குழுமத்தின் மீதான பிரச்சனைக்கு மத்தியில் ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டு வருகின்றன. இந்த நிலையில் அதானி குழும நிறுவனங்களை போல நாட்டின் முன்னணியில் உள்ள 20 நிறுவனங்களை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

ET அறிக்கையின் படி, லாபம் மற்றும் நிதியியல் சம்பந்தமான அறிக்கை என பலவற்றையும், செயல்திறனையும் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக கூறப்படுகின்றது.

 20 நிறுவனங்கள் கண்காணிப்பா?

20 நிறுவனங்கள் கண்காணிப்பா?

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இது நிறுவனங்கள் மத்தியில் ஒரு அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் இது நிறுவனங்கள் திறம்பட செயல்பட வழிவகுக்கலாம். அதேபோல நிறுவனங்களிடையே, ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், அது குறித்து முன் கூட்டியே நடவடிக்கை எடுக்கவும் பயனுள்ள ஒன்றாக இருக்கலாம்.

 ரிசர்வ் வங்கி நடவடிக்கை

ரிசர்வ் வங்கி நடவடிக்கை

இந்த ஆய்வில் கடன் மட்டும் அல்ல, பல்வேறு வகையிலும் பிரித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான பிறகு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனைகளை தவிர்க்க திட்டம்

பிரச்சனைகளை தவிர்க்க திட்டம்

குறிப்பாக ரிசர்வ் வங்கியின் இந்த கண்காணிப்பில் வங்கிகள் மற்றும் தனிப்பட்ட வங்கிகள் மீது உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே மிகப்பெரிய கடன்களை நிதி கண்காணிப்பு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. ஆக தற்போது இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது மேற்கொண்டு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தவிர்க்கும் ஒரு வாய்ப்பாக அமையலாம்.

20 நிறுவனங்கள் எது?

20 நிறுவனங்கள் எது?

மொத்தத்தில் வங்கி துறையில் மட்டும் அல்ல, மற்ற அனைத்து துறைகளிலும் அலசி ஆராய்வது என்பது, தவறுகளை முன் கூட்டியே களைய வழிவகுக்கலாம், இதன் மூலம் முதலீட்டாளர்கள் நலனையும் மேம்படுத்த முடியும்.

அதானி குழுமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து இன்னும் 2 மாதத்திற்குள் விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தாலும், முன் கூட்டியே இதுபோன்ற கணகாணிப்புகள் இருந்திருந்தால், இப்பிரச்சனைகள் வந்திருக்காது என்பதும் ஒரு தரப்பினரின் வாதமாக உள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்பட்டாலும், அந்த 20 நிறுவனங்கள் எது எது என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+