விலை மதிப்புள்ள நகைகள், முக்கியமான ஆவணங்களை வீட்டில் வைத்திருப்பதைக் காட்டிலும் வங்கி சேப்டி லாக்கர்களில் வைப்பது மிகவும் பாதுகாப்பான விஷயமாகும்.
ஆனால் லாக்கர்களைப் பயன்படுத்தும் முன்பாக அது குறித்த விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வங்கி பாதுகாப்பு லாக்கர்கள் பற்றி இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக பல்வேறு விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த விதிகளை வங்கிகளும் லாக்கர் வைத்திருப்பவர்களும் கவனமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

முறையற்ற வகையில் லாக்கர்களை கையாளுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை. லாக்கர்கள் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டால் அவை காலியாக இருக்கும் பட்சத்தில் அவற்றை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் ஒதுக்க வேண்டும். காலியாக உள்ள லாக்கர்கள் விவரத்தை வங்கிகள் அறிந்து கொண்டு அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் நோட்டீஸ் போர்டில் அறிவிக்க வேண்டும்.
சேப் டெபாசிட் லாக்: ஆகஸ்ட் 2022இல் ரிசர்வ் வங்கி சேப் டெபாசிட் லாக்குகள் பற்றி புதிய விதிகளை அறிவித்தது. இதன்படி இப்போதுள்ள லாக்கர் ஹோல்டர்களுடனான ஒப்பந்தத்தை 2023 ஜனவரி 1க்குள் புதுப்பிக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி காலியாக உள்ள லாக்கர்கள் பட்டியலையும் காத்திருப்போர் பட்டியலையும் வெளியிட வேண்டும் என வங்கிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் லாக்கர் ஒதுக்கும்போது அதிகபட்சம் மூன்று வருடத்துக்கான லாக்கர் வாடகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கலாம்.
ரிசர்வ் வங்கி சீரமைத்துள்ள விதிகளின்படி வங்கிகள் தரும் லாக்கர் ஒப்பந்தத்தில் முறையற்ற விதிகள் இடம் பெறக்கூடாது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் இதிலிருந்து வங்கிகள் தப்பிக்க முடியாது.
புதிய விதிகளின்படி லாக்கர்களில் எந்த மாதிரியான பொருட்களை வைக்கலாம், வைக்கக்கூடாது என்பது பற்றி ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். வாடிக்கையாளர்கள் நகைகள், முக்கிய ஆவணங்கள், சட்டப்படியான பொருட்களை மட்டுமே வங்கி லாக்கர்களில் வைக்க வேண்டும். வங்கி லாக்கர்களை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுக முடியும். அவரது குடும்ப உறுப்பினரோ அல்லது வேறு யாருமோ லாக்கரை திறக்க அனுமதியில்லை.
ஆயுதங்கள், பணம், வெளிநாட்டு கரன்ஸிகள், மருந்துகள், விஷத்தன்மையுள்ள பொருட்கள் இந்த லாக்கர்களில் வைக்கக் கூடாது. லாக்கரில் பணம் வைக்கப்பட்டு மாயமானால் அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது.
லாக்கர் வைத்திருப்பவர் யாரையாவது நாமினியாக நியமித்திருந்தால் அவரது மரணத்துக்குப் பின் நாமினி அந்த லாக்கரைத் திறப்பதற்கு அனுமதி உண்டு. நாமினி பற்றிய விவரங்களை வங்கிகள் நன்கு விசாரித்து அறிந்த பின்னர் லாக்கரை திறக்க நாமினிக்கு அனுமதி தரப்படும்.
Story written by: Jayachandran
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications