2024 ஏப்ரல் 1 ஆம் தேதியன்று 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவோ அல்லது பரிவர்த்தனை செய்யவோ அனுமதியில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுவரை அதன் 19 கிளைகளில் இந்த நோட்டுகள் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தன. இப்போது திடீரென இந்த அறிவிப்பு வந்துள்ளது. இருப்பினும் இது ஒரு தாற்காலிக தடை தான் என்றும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் மீண்டும் 2000 ரூபாயைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் சுழற்சி 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியன்று நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இதுவரை 97.62 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டன. வெறும் 8,470 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே மக்களிடம் உள்ளது.
2000 நோட்டை வைத்திருப்பவர்கள் அதை ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது அதற்கு பதிலாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலம் ஏதாவது ஒரு தபால் நிலையத்திலிருந்து ரிசர்வ் வங்கி கிளைகளுக்கு அனுப்பி தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
2023 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 நோட்டுகளை தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களது வங்கியில் டெபாசிட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் அக்டோபர் 7 2023 உடன் இந்த வசதி நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது அதற்குரிய பண்த்தைப் பெற்றுக்க கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆர்பிஐயின் அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டீகர், சென்னை, குவாஹாட்டி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, நாக்பூர், புதுதில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய அலுவலகங்களில் டெபாசிட் செய்யலாம்.
1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் 2016 ஆம் ஆண்டு நவம்பரில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications