ரெப்போ விகித்தில் No Change.. வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்!

இந்திய ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3ஆம் தேதி துவங்கிய நிலையில், இக்கூட்டத்தின் முடிவுகளை இன்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டார். இதில் பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றுமும் இல்லாமல் 5.25 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ-யில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடரும். இதில் முக்கியமாக ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களும் பலன் பெறுவார்கள் என்பதால் வீட்டு கடன் வாங்கியவப்களின் ஈஎம்ஐ உயரவோ, குறையவோ செய்யாது.

ரெப்போ விகித்தில் No Change.. வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்!

ஆர்பிஐயின் நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்டு பேசிய ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இக்கூட்டம் மத்திய கிழக்கு போர் பதற்றம், மாறிவரும் பருவமழை, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் இந்திய பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் ஏற்படும் தாக்கம் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது. நாளுக்கு நாள் உலகளாவிய பொருளாதாரமும், வர்த்தக சந்தையும் நிலையற்றதாக மாறி வருகிறது என சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

இதன் அடிப்படையிலேயே இந்தியா பொருளாதாரம், வர்த்தக சந்தைக்கு நிலையான வளர்ச்சி பாதையை உருவாக்கும் பொருட்டு வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க நாணய கொள்கை குழுவில் இருக்கும் நபர் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார் ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா. ஆர்பிஐ கடைசியாக டிசம்பர் 2025ல் தனது ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளை குறைத்து ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதமாக அறிவித்தது. அதன் பின்பு எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 5.25 சதவீதமாக இருக்கிறது.

2025ஆம் ஆண்டில் ஆர்பிஐ பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், டிசம்பர் என 4 முறை தலா 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிப்ரவர் 2025 ரெப்போ விகித குறைப்பிற்கு முன்பு சுமார் 24 மாதம் எவ்விதமான வட்டி விகித குறைப்பு செய்யாமல் இருந்து, பிப்ரவரி 2023ல் 6.50 சதவீதமாக ரெப்போ விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு 24 மாதம் ஓரே வட்டி விகிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கூட்டத்தில் பேசிய ஆர்பிஐ கவர்னர், நாட்டின் பணவீக்கம் டார்கெட் அளவீட்டை காட்டிலும் அதிகமாக உள்ளது. பணவீக்க அளவீடு 4 சதவீதத்திற்கு மேல் உயர முக்கியமான காரணம் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு தான், கோர் பணவீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் தெரிவித்தார். 3வது காலாண்டில் நாட்டின் பணவீக்கம் பெரியளவில் அதிகரித்து, அதன் பின்பு குறையும் என்றும் தெரிவித்தார்.

இதோடு மத்திய கிழக்கு போர் உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையிலும், இந்தியா தொடர்ந்து அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது எனவும் ஆர்பிஐ கவர்னர் பேசினார். இதன் மூலம் 2027ஆம் நிதியாண்டில் நாட்டின் ரியல் ஜிடிபி அளவு 6.7 சதவீதம் வரையில் உயரும் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+