ஆர்.பி.ஐ, வட்டி விகிதம், ரெபோ ரேட்
டெல்லி : கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் கடுமையான சரிவில் காணப்படுகிறது.
கொரோனாவின் கோராத்தாண்டவத்தின் மத்தியில் பொருளாதாரம் மட்டும் அல்ல, மக்களும் நெருக்கடியான நிலையினை எதிர்கொண்டு வருகின்றனர்.
பல லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். தற்போது நாடு தழுவிய லாக்டவுன் இல்லையென்றாலும், பல மாநிலங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வட்டியில் மாற்றமில்லை
இதனால் பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடுகள் சரிவினைக் கண்டுள்ளன. இதனையடுத்து வங்கிகளில் வாங்கிய கடனையும் மக்கள் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் இன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 5 வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை. இது வழக்கம்போல 4% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது நல்ல விஷயம் தான்
இதே போல ரிவர்ஸ் ரெப்போ விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் குறைக்கப்படாவிட்டாலும் விகிதம் அதிகரிக்கப்படாமல் இருப்பதே நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கொண்டு கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வாய்ப்பிருக்காது. ஆக இதுவே இன்றைய காலக்கட்டத்தில் மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
வளர்ச்சிக்கு அடித்தளம்
இதே ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்பதும் 3.35% ஆக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருப்பது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது பணப்புழக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் எதிர்பார்ப்பு
மத்திய வங்கி பணவீக்க விகிதத்தினை வருடத்திற்கு மார்ச் 31, 2026 வரையில் 4% ஆகவே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6% அதிகபட்சமாகவும், குறைந்தபட்சமாகவும் 2% ஆகவும் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கொரோனா அலைக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானது பெரியளவில் ஆறுதல் இல்லாவிட்டாலும், வட்டி மாற்றமின்மையே பெரிய ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications