இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), திங்கள்கிழமை மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தின் இச்சல்கரஞ்சி பகுதியில் இருக்கும் சங்கரராவ் பூஜாரி நூதன் நகரி சககாரி வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வணிக நேரம் முடிவடைந்ததிலிருந்து, இவ்வங்கி எவ்விதமான வங்கி பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டு உள்ளது.
சங்கர்ராவ் பூஜாரி நுதன் நகரி சககாரி வங்கியின் உரிமத்தை ரத்து செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் ஆர்பிஐ விதிமுறைகள் படி இவ்வங்கி புதிய டெபாசிட்களை ஏற்றுக்கொள்ளவும், டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்துவது, கடன் கொடுப்பது என எவ்விதமான நடவடிக்கைகளையும் செய்யக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சங்கர்ராவ் பூஜாரி நுதன் நகரி சககாரி வங்கியிடம் தனது வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான நிதி ஆதாரம் இல்லை என்பதாலும், வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதாலும் வங்கி உரிமத்தை ரத்துச் செய்துள்ளதாக ஆர்பிஐ விளக்கம் கொடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி மேலும் கூறுகையில், யுனைடெட் இந்தியா கோ-ஆப்பரேடிவ் வங்கி நிர்வாகம் கோலாப்பூர் மாவட்டத்துக் கூட்டுறவு வங்கி தொடர்ந்து தனது வணிகத்தைச் செய்ய அனுமதித்தால், தற்போதைய நிதி நிலையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு வைப்புத் தொகையைக் கூட முழுமையாகச் செலுத்த முடியாது என அறிவுறுத்தியுள்ளது.
சங்கரராவ் பூஜாரி நூதன் நகரி சககாரி வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது மூலம் ஆர்பிஐ-யின் டிஐசிஜிசி சட்டம் 1961 இணங்க டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனிடமிருந்து (டிஐசிஜிசி) இவ்வங்கி டெப்பாசிட்தாரர்களுக்கு 5,00,000 ரூபாய் வரையிலான தொகைக்குக் காப்பீடு பெற உரிமை உண்டு என்று ரிசர்வ் வங்கி கூறியது.
டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் உதவியுடன் 99.85% டெபாசிட்தாரர்கள் DICGC இலிருந்து தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் பெற உள்ளனர். DICGC ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்ட டெபாசிட்களில் ₹41.60 கோடியை DICGC இவ்வங்கி காப்பீட்டுதாரர்களுக்குச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications