மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டம் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று காலை வெளியிடப்பட நிலையில் பலரும் கவனிக்க மறந்த ஒரு சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒரு சேவை மூலம் இந்தியாவில் இருக்கும் அனைத்தும் குழந்தைகளும் யூபிஐ சேவையைப் பயன்படுத்த முடியும்.
யூபிஐ சேவை தளத்தில் இனி delegated payments செய்ய முடியும், இந்த புதிய சேவையை 2 நாள் நாணய கொள்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர். இந்த delegated payments என்றால் என்ன..? யாருக்கெல்லாம் இந்த சேவையைப் பயன்பெறும்..?

Delegated payments என்பது ஒரு நபர் (முதன்மை பயனர்) மற்றொரு நபருக்கு (துணை பயனர்) தனது வங்கி கணக்கிலிருந்து யூபிஐ பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்க முடியும். அதாவது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து மகன் தனது யூபிஐ கணக்கில் இருந்து பரிவர்த்தனை செய்ய முடியும். இத்தகைய பரிவர்த்தனைக்கு அதிகபட்ச வரம்பை முதன்மை பயனர் அதாவது தந்தை நிர்ணயிப்பார்.
இத்தகைய சேவை குடும்பத்தில் மட்டும் அல்லாமல் பல இடத்தில் பயன்படும், உதாரணமாக ஒரு நிறுவனத்தின் சார்ப்பில் நிறுவனத்தின் இதர செலவுகளைச் செய்யக்கூடிய ஒரு நபருக்கு இத்தகைய வசதி பயனுள்ளதாக இருக்கும், இப்படி பல இடத்தில் பல வகையில் இந்த delegated payments பயன்படும், தற்போது இது யூபிஐ செயலியிலும் வந்துள்ளதால் கூடுதல் நன்மை அளிக்கும் விஷயமாக உள்ளது.
இதுகுறித்து பேமெண்ட் சேவை நிறுவனமான கியவி-யின் இணை நிறுவனர் மற்றும் சிபிஓ மோகித் பெடி கூறுகையில் "முதன்மை கணக்கு உரிமையாளரை (பெற்றோர்) பேமெண்ட்-க்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரியாக மாற்ற முயற்சிக்கின்றனர், இதனால் யூபிஐ-யை சிறுவர்களும் பயன்படுத்த முடியும். பெற்றோர்கள் குடும்ப கணக்கு வழியாக ஒரு பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலம் யூபிஐ பயன்பாட்டில் முற்றிலும் புதிய அமைப்பு உருவாகிறது" என்று தெரிவித்தார்.
சிறுவர்கள் தங்கள் பெற்றோரின் கணக்குகளில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாகச் சேர்க்கப்பட்டு, டெபிட் கார்ட் வழங்கப்படுவது போன்றது இது. தற்போது இந்த புதிய சேவையில் வங்கி கணக்கு இல்லாத ஒரு சிறுவர் அல்லது நபர் யூபிஐ பயன்பாட்டில் உள்ள 'குடும்ப கணக்கில்' சேர்க்கப்படுவார் என்று பேடி கூறினார்.
இந்த பரிவர்த்தனைகள் சேமிப்பு கணக்கு மூலமாக மட்டுமே நடக்கும், கிரெடிட் கார்டு அல்லது கடன் வரம்பு மூலம் நடக்காது என்று பிற பேமெண்ட் துறையின் தொழில் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதோடு ரிசர்வ் வங்கி மற்றொரு அறிவிப்பில், ஒரே நேரத்தில் செய்யப்படும் யூபிஐ மூலம் வரி செலுத்தும் வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதற்கு முன், வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பு ரூ. 1 லட்சமாக இருந்தது. இதனால், பணம் செலுத்துவது எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் நெப்ட் மூலம் செலுத்துவதற்குப் பயனருக்கு கணக்கு எண்களை உள்ளிட வேண்டும், மேலும் பரிவர்த்தனை வேகமும் அதிகரிக்கும்.
More From GoodReturns

29 லட்சம் கோடி சாதனை! UPI-ல் குவியும் பணம்..மோசடியில் இருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications