G-Sec: இந்திய முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டு தொகுதி.. RBI வெளியிட்ட ஆப்..!

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி முதலீட்டு துறைக்கும், நிதி சேவைத் துறைக்கும் மூன்று புதிய முயற்சிகளைச் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமானதாக விளங்குவது ஒரு மொபைல் ஆப், ரீடைல் முதலீட்டாளர்கள் அதாவது சாமானிய முதலீட்டாளர்களுக்கு அரசாங்க பத்திர முதலீடு செய்ய புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இது தற்போது முதலீட்டுச் சந்தையில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களுக்கும் அரசு பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 G-Sec: இந்திய முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டு தொகுதி.. RBI வெளியிட்ட ஆப்..!

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரீடைல் டைரக்ட் மொபைல் ஆப் குறித்து பேசுகையில் "புதிய ரீடைல் டைரெக்ட் மொபைல் ஆப் மூலம், அரசாங்க பத்திர முதலீடு செய்பவர்கள், எளிதாகவும் வசதியாகவும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் அரசாங்க பத்திரங்களில் (ஜி-செக்) முதலீட்டு செய்வது மேலும் ஊக்குவிக்கப்படும்" என கூறினார்.

இந்த மொபைல் செயலி மூலம், முதலீட்டாளர்கள் மத்திய அரசு பத்திரங்கள், மாநில அரசு பத்திரங்கள், ட்ரஷரி பத்திரங்கள் போன்ற பல்வேறு அரசாங்க கடன் பத்திரங்களில் ஒரு ரீடைல் முதலீட்டாளர் எளிதாக முதலீடு செய்ய முடியும்.

தற்போது, இந்த அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் இணையதளத்தில் (website) மட்டுமே உள்ளதால், இதை மக்களின் இன்றைய முதலீட்டு பழக்கத்திற்கு எளிமையாக்கும் வகையில் மொபைல் செயலி வாயிலாகக் கொண்டு வர ஆர்பிஐ முடிவு செய்து தற்போது மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சில்லறை முதலீட்டாளர்கள் அரசாங்க பத்திரத்தில் நேரடியாக முதலீடு செய்ய Retail Direct Scheme, 2021 என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ், ப்ரைமரி ஏலங்களில் அரசாங்க பத்திரங்களை வாங்கவும், செக்கண்டரி சந்தையில் அவற்றை வாங்கி / விற்பனை செய்யவும் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஆர்பிஐ அனுமதி வழங்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் Retail Direct Scheme, ஒரு தனிநபர் முதலீட்டாளர் ரிசர்வ் வங்கியில் gilt கணக்குகளை (gilt accounts) உருவாக்கி அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான வசதியை வழங்கியது.

இந்த திட்டம் முதலீட்டாளர்கள் ப்ரைமரி ஏலங்களில் பத்திரங்களை வாங்குவதற்கும், NDS-OM தளம் வழியாகப் பத்திரங்களை வாங்க / விற்பதற்கும் அனுமதிக்கிறது. மேலும் இதை இணைய தளம் வாயிலாக மட்டுமே செய்ய முடியும் நிலை இருந்தது. இதை மாற்றும் விதமாக இப்போது, புதிய மொபைல் செயலி மூலமாகப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வது என்பது வங்கி வைப்பு நிதியைக் காட்டிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், இதுவரை இந்த முதலீட்டு முறை சிக்கலானதாகவும் நேரம் செலவழிக்கும் செயல்முறையாகவும் இருந்தது.

இந்த புதிய மொபைல் செயலி மூலம், முதலீட்டு பெரிய அளவில் செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, ரீடைல் முதலீட்டாளர்கள் தங்களுடைய போர்ட்போலியோ-வின் ஸ்திரதன்மையை மேம்படுத்தும் வகையில் 10-15 சதவீத வரையிலான தொகையை அரசு பத்திரங்களுக்கு ஒதுக்க முடியும்.

மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு வளர்ச்சி திட்டத்திற்காகப் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுகிறது. இதில் முதலீடு செய்யும் வாய்ப்பை தான் தற்போது ஆர்பிஐ எளிதாக்கியுள்ளது. இன்றைய அரசு பத்திரங்களின் நிலவரம்.

 G-Sec: இந்திய முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டு தொகுதி.. RBI வெளியிட்ட ஆப்..!

இதில் செக்யூரிட்டி டிஸ்கிரிப்ஷன் கீழ் இருப்பது தான் பத்திரத்தில் விபரம், உதாரணமாக முதலில் இருக்கும் 7.10 GS 2034 இதில் 7.10 என்பது வட்டி விகிதம், GS என்பது Government Securities, 2034 என்பது பத்திரம் முடிவு பெறும் வருடம். தற்போது வர்த்தகத்தில் இருக்கும் பத்திரங்கள் படி அரசு பத்திரத்திற்கு 6.54 முதல் 8.24 சதவீதம் வரையில் வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+