ரிசர்வ் வங்கி இன்று முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டு அசத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரிசர்வ் வங்கி அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் Retail Direct Scheme தளத்திற்கு மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த மொபைல் செயலி மூலம், முதலீட்டாளர்கள் மத்திய அரசு பத்திரங்கள், மாநில அரசு பத்திரங்கள், ட்ரஷரி பத்திரங்கள் போன்ற பல்வேறு அரசாங்க கடன் பத்திரங்களில் ஒரு ரீடைல் முதலீட்டாளர் எளிதாக முதலீடு செய்ய முடியும்.

தற்போது, இந்த அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் இணையதளத்தில் (website) மட்டுமே உள்ளதால், இதை மக்களின் இன்றைய முதலீட்டு பழக்கத்திற்கு எளிமையாக்கும் வகையில் மொபைல் செயலி வாயிலாக கொண்டு வர ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று மக்களிடம் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிடும் போது பேசும் போது, "ரிசர்வ் வங்கி Retail Direct Scheme, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்தளத்தை அணுகுவதற்கான மொபைல் செயலியை இப்போது அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் மற்றும் அரசாங்க கடன் பத்திர சந்தையை விரிவுபடுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் Retail Direct Scheme , ஒரு தனிப்பட்ட முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியில் gilt கணக்குகளை (gilt accounts) உருவாக்கி அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான வசதியை வழங்குகியது.
இந்த திட்டம் முதலீட்டாளர்கள் ப்ரைமரி ஏலங்களில் பத்திரங்களை வாங்குவதற்கும், NDS-OM தளம் வழியாக பத்திரங்களை வாங்க/விற்பதற்கும் அனுமதிக்கிறது.
இந்த செயல்முறையை எளிதாக்குவதற்காக, ரிசர்வ் வங்கி நேரடி முதலீட்டு திட்ட இணையதளத்திற்கான மொபைல் செயலி வடிவத்தை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம், முதலீட்டாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப, எந்த இடத்திலிருந்தும் பத்திரங்களை வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும். இந்த மொபைல் செயலி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
முக்கிய நன்மைகள்: இந்த மொபைல் செயலி மூலம், முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இணையதளம் இத்தகைய சேவையை வழக்காது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications