இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்றைய கூட்டத்தில் அதன் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாது என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற முக்கிய இலக்குகள் இருக்கும் காரணத்தாலும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டி விகிதங்கள் குறித்த முடிவுகளுக்கு மத்தியில் உயர துவங்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர்பிஐ கவனம் செலுத்து வேண்டிய கட்டாயம் உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி, மே 2022 இல் தொடங்கி படிப்படியாக 2023 ஆண்டு பிப்ரவரியில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்தை உயர்த்தியது.

கடந்த மூன்று இருமாத நாணயக் கொள்கை கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் மாறாமல் இருந்தாலும், உயர்வான வட்டி விகிதம் மக்களை பெரிய அளவில் பாதித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் முதல் கார்பரேட் நிறுவனங்கள் வகையில் வட்டி விகித குறைப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் குழு (எம்பிசி) அக்டோபர் 4ஆம் தேதி இரு நாள் கூட்டத்தை கூட்டி இன்று முடிவுகளை வெளியிட உள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பை ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. ஆனால் பருவமழை பொய்த்த காரணத்தால் உணவு பணவீக்கம் மோசமாக இருக்கும் காரணத்தால் ஆகஸ்ட் மாதத்தில், சில்லறை பணவீக்கம் 6.83 சதவீதமாக இருந்தது, இது ரிசர்வ் வங்கியின் இலக்கு அளவீட்டை விடுவும் அதிகமாகவே இருக்கிறது.
இந்த ரிசர்வ் வங்கி மே 2022 இல் திட்டமிடப்படாத சந்திப்பின் போது நாட்டின் நிதிநிலையை ஆய்வு செய்து MPC கூட்டத்தை கூட்டி ரெப்போ வட்டி விகிதத்தை சுமார் 40 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியது. பிப்ரவரி 2023 வரை அடுத்தடுத்த கூட்டங்களில் தொடர்ச்சியான ரெப்போ வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. மே 2022 முன்பு ரெப்போ விகிதம் வெறும் 4.5 சதவீதம் மட்டுமே, இது தான் ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு பொற்காலமாக இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications