RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

இந்திய ரூபாய் மதிப்பில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவை கட்டுப்படுத்த முக்கியமான நடவடிக்கையாக இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 10 முதல், இந்திய வங்கிகள் தினசரி வணிக முடிவில் 100 மில்லியன் டாலர் அளவை தாண்டி "நெட் ஓபன் பொசிஷன்" வைத்திருக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ரூபாயின் மதிப்பை தற்காலிகமாக நிலைநிறுத்த உதவியுள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 94.86 என்ற வரலாற்று சரிவில் இருந்து, தற்போது 93.87 வரையில் குறைந்துள்ளது. இது இறக்குமதியாளர்களுக்கு பெரும் நிவாரணம் தரும்.

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

'நெட் ஓபன் பொசிஷன்' என்றால் என்ன?
வங்கிகள் பொதுவாக ரூபாய் மதிப்பு குறையும் என எதிர்பார்த்து டாலர்களை வாங்கி வைத்திருப்பது வழக்கம். இந்த நிலையை "நெட் ஓபன் பொசிஷன்" என்று அழைக்கப்படுகிறது. இப்போது RBI இந்த அளவை கட்டுப்படுத்தியதால், $100 மில்லியனை மீறும் டாலர் வைத்திருக்கும் வங்கிகள் அவற்றை சந்தையில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

வங்கிகள் டாலர்களை விற்பனை செய்ய ஆரம்பித்தால், சந்தையில் டாலர் விநியோகம் அதிகரிக்கும். இதனால் டாலர் டிமாண்டில் ஏற்பட்டுள்ள டிமாண்ட் குறைந்து, ரூபாய் மதிப்பு உயரும். தற்போது ரூ.94.81 என்ற சரிவான நிலையை எட்டியுள்ள ரூபாய், ஆர்பிஐ நடவடிக்கையால் ரூ.93.50-ரூ.94.50 வரையிலான அளவுக்கு உயரக்கூடும் என சந்தை நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது சுமார் 70-100 பைசா வரை உயர்வை குறிக்கிறது.

நிபுணர்கள் எச்சரிக்கை
இந்நிலை நீண்டகாலம் நீடிக்காது எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வங்கிகள் தங்களது அதிகப்படியான டாலர் பொசிஷன்களை சரிசெய்த பிறகு, இந்த ஆதரவு குறையக்கூடும். அதாவது, இந்த உயர்வு ஒரு குறுகியகால மாற்றமாக மட்டுமே இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

ரூபாய் சரிவுக்கு முக்கிய காரணங்கள்
ரூபாய் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணம் மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகும். இந்தியா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. எண்ணெய் விலை உயர்ந்தால், அதிக டாலர் தேவைப்படும். இதனால் டாலரின் தேவை அதிகரித்து, ரூபாய் மதிப்பு சரிகிறது.

2026 ஆம் நிதியாண்டில் ரூபாய் சுமார் 10% வரை சரிந்துள்ளது. குறிப்பாக, போர் தொடங்கியதிலிருந்து 3.5% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2025 ஏப்ரலில் ரூ.85.57 இருந்த ரூபாய், தற்போது ரூ.94.81 என்ற வரலாற்று குறைந்த நிலையை எட்டியுள்ளது.

மத்திய கிழக்கு போர் பதற்றம் நீடித்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும், ரூபாய் மீண்டும் பாதிக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு ரூ.96-ரூ.97 வரை குறையும் அபாயம் இருப்பதாக சந்தை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

வங்கிகளுக்கு பாதிப்பு
RBI உத்தரவினால் வங்கிகள் விரைவாக டாலர்களை விற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சந்தை நிலைமைக்கு ஏற்ப விற்பனை செய்ய முடியாவிட்டால், வங்கிகளுக்கு mark-to-market இழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

RBI எடுத்துள்ள இந்த நடவடிக்கை ரூபாயை தற்காலிகமாக நிலைநிறுத்தும் முயற்சியாக பார்க்கப்பட்டாலும் உலகளாவிய காரணிகள் குறிப்பாக போர் பதற்ரம் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை அதிகரிப்பது தொடர்ந்தால், ரூபாயின் நீண்டகால நிலைத்தன்மை தொடர்ந்து சவாலாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+