கையில் பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும், ஆனால் அவ்வாறு முதலீடு செய்யும் தொகை பத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவருக்கு ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட் (Floating Rate Savings Bond) உதவியானதாக இருக்கும். இந்தத் திட்டத்திற்கு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்திற்கு 8.5 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி விகிதம் வழங்கப்படுகிறது அதன் விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட் என்றால் என்ன?: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் இந்த பத்திரங்கள் வழங்கப்படுகிறது. இதனை ஒரு முதலீட்டாளர் வாங்கிவிட்டால் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை, இதற்கான வட்டியைப் பெற முடியும். ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை ரெப்போ வட்டி விகிதத்தை பொறுத்து, இந்தப் பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் மாறுபடும்.

இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்?: இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும், இந்தப் பத்திரங்களை வாங்க முடியும். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் பத்திரம் என்பதால், உங்களுடைய முதலீடு பாதுகாப்பானதாக இருக்கும்.
முதிர்வுக்காலம்: இந்த பத்திரங்களுக்கான பொதுவான லாக்கின் காலம் 7 வருடங்கள். அதாவது 7 வருடங்கள் வரை நீங்கள் முதலீடு செய்த தொகையைத் திரும்ப பெற முடியாது. ஒருமுறை இந்த பாண்டை நீங்கள் வாங்கிவிட்டால், பிறகு ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை உங்களுக்கு வட்டி அளிக்கப்படும். முதிர்வு காலம் முடிந்த பிறகு உங்களுடைய அசல் தொகையை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
மூத்தக் குடிமக்களாக இருந்தால், குறைந்தபட்ச லாக்கின் காலத்துடன் தொகையைத் திரும்ப பெற முடியும். ஆனால் இது போன்ற சூழ்நிலைகளில் அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல இந்த பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கான லாக்கின் காலம் ஒருவருடைய வயதைப் பொருத்தும் மாறுபடலாம். 60 முதல் 70 வயது உடையவர்களுக்கு 6 ஆண்டுகள், 70 வயது முதல் 80 வயது உடையவர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்: இந்த பத்திரங்களுக்கான வட்டி விகிதங்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் ஜனவரி 1 முதல் ஜூன் 31ஆம் தேதி வரை இருந்த வட்டி விகிதம் தான் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்திற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு இருந்த 8.5 சதவீத வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த பத்திரங்களை குறைந்தது ரூ. 1000 முதல் வாங்கலாம். அதன் பிறகு 1000 மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும், நீங்கள் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு, இந்தப் பத்திரங்களுக்குக் கிடையாது. மேலும் நீங்கள் சம்பாதித்த வட்டி வரிக்கு உட்பட்டது. இந்த பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு வரி விலக்கு பெற முடியாது.
ஆர்பிஐ வழங்கும் ஃப்ளோட்டிங் ரேட் பத்திரத்தை எப்படி வாங்குவது?: ஃப்ளோட்டிங் ரேட் பத்திரத்தை பெற ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில், உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் முறையில், உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்லலாம். தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, நியமிக்கப்பட்ட கிளையில் தேவையான தொகையை பணமாகவோ அல்லது காசோலையாகவோ டெபாசிட் செய்யவும். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்தும் நீங்கள் ஃப்ளோட்டிங் ரேட் பத்திரத்தைப் பெறலாம்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?



Click it and Unblock the Notifications