தங்கள் கனவு இல்லங்களை வாங்குவதற்கு மற்றும் இதர தேவைகளுக்காக லோன் பெறுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அப்படி லோன் பெறும்போது வங்கிகள் இன்சூரன்ஸ் கட்டணம், ப்ராசசிங் கட்டணம், முன் கூட்டியே செலுத்தக்கூடிய கட்டணம், கடன் காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்தினால் அதற்கான கட்டணம் என வங்கிகள் கட்டணத்தை தீட்டிவிடும். எனவே நீங்கள் கடன் பெறும் கடன் வழங்குனரிடமிருந்து KFS ஸ்டேட்மெண்ட் பெறலாம். அதில் இதுபோன்ற கட்டணங்களின் விவரங்களை நீங்கள் சரி பார்க்கலாம். KFS ஸ்டேட்மெண்ட் பெறுவதனால் என்ன பயன்கள் என்ற விவரங்களை விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
ரிசர்வ் வங்கி (RBI) விதிகளின் படி அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு Key Fact Statement - KFS எனும் அறிக்கையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் கண்டிப்பாக KFS ஆவணத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கையால் கடன் வாங்குபவர்களுக்கு என்ன பயன்? என்பதைப் பார்ப்போம்.
KFS என்றால் என்ன?: KFS ஸ்டேட்மெண்ட் என்பது கடன் தொடர்பான முக்கிய விவரங்களை தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கும் ஒரு ஆவணம். இதில் கடன் தொகை, வட்டி விகிதம், கடன் திருப்பிச் செலுத்தும் காலம், கூடுதல் கட்டணங்கள், மொத்த கடன் செலவு, டெர்ம்ஸ் & கண்டிஷன்கள், மறைமுக கட்டணங்கள் போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
KFS ஸ்டேட்மெண்ட் பெறுவதனால் நன்மைகள் என்ன?:
கடன் பற்றிய தெளிவு: கடன் தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே அறிக்கையில் தெளிவாகக் கொடுக்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு உதவியான ஒன்றாக இருக்கும். இதனால் லோன் பெறும்போது செலுத்தும் கட்டணங்களில் குழப்பம் இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள முடியும்.
பல்வேறு வங்கிகளின் கடன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்: பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்க KFS உதவும்.
கட்டணங்கள் பற்றிய விவரங்கள்: கடன் தொடர்பான மறைமுக கட்டணங்கள்,இன்சூரன்ஸ் சார்ஜஸ் போன்ற அனைத்து கட்டணங்களின் விவரங்களையும் பார்க்கலாம். இந்த புதிய நடவடிக்கையால் கடன் வாங்குபவர்கள் தங்களுக்கு ஏற்ற சிறந்த கடனை எளிதாகத் தேர்வு செய்ய முடியும். மேலும், மோசடி மற்றும் தவறான விளம்பரங்களைத் தடுக்கவும் உதவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications