இந்தியா மற்றும் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் குறைந்து வரும் பணவீக்கம், தொடர்ந்து மேம்பட்டு வரும் வேலைவாய்ப்புத் தரவுகள் ஆகியவை அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வின் வேகத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் இன்று (டிசம்பர் 5) துவங்கி அடுத்த இரண்டு நாட்கள் நடக்க உள்ளது.
பொருளாதார மந்தநிலை
உலக நாடுகளின் பொருளாதார மந்தநிலை மீதான தாக்கமும் குறைந்துள்ள காரணத்தால் முதலீட்டுச் சந்தைகளும் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி வர துவங்கியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்காக மாத சம்பளக்காரர்கள் முதல் தினமும் கோடி கணக்கில் பணத்தை டர்ன்ஓவர் செய்யும் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் வரையில் காத்திருக்கின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கி
டிசம்பர் 5-7 ஆம் தேதி நடக்க உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு சந்தை நிலவரத்தைப் பொருத்து 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை உயர்த்தும் என 10 ல் 9 வங்கிகள் கருத்துக் கணிப்பில் பதில் அளித்துள்ளது.
வட்டி விகித உயர்வு
சில வங்கிகள் இக்கூட்டத்தில் 25-35 அடிப்படை புள்ளிகள் வரையிலான வட்டியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூட்டத்தில் ஆர்பிஐ முந்தைய கூட்டத்தைப் போல் அதிகப்படியாக 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தாமல் குறைவான அளவிலேயே வட்டி விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, ஆனால் யாருமே வட்டி விகித உயர்வு இருக்காது என அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல்
சமீபத்தில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் கூறுகையில் பணவீக்கம், வேலைவாய்ப்பு தரவுகள் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்குச் சாதகமாக மாறி வரும் நிலையில் அடுத்த வட்டி விகித உயர்வு குறைவாகவும், வட்டி விகித உயர்வின் வேகத்தையும் குறைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய பங்குச்சந்தை
இதைத் தொடர்ந்து தான் இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீடுகள் அளவு அதிகரித்துத் தினமும் புதிய உச்சத்தைச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு எட்டி வந்தது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
அனைத்திற்கும் மேலாகப் புதிய முதலீட்டை ஈர்க்க முடியாமல் மோசமான நிலையில் இருந்த இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த நவம்பர் மாதத்தில் சுமார் 75 ஒப்பந்தங்கள் உடன் சுமார் 1,275 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகப் பெற்றுள்ளது, இதில் ஆரம்பக் கட்ட முதலீடு பிரிவில் 1,004 மில்லியன் டாலரும், லேட் ஸ்டேஜ் முதலீட்டுப் பிரிவில் 270 மில்லியன் டாலரும் பெற்றுள்ளது.
ரெசிஷன்
ஒவ்வொரு நாட்டின் பொருளாதார மந்த நிலை அதாவது ரெசிஷனுக்கு மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டால் புதிய கடன் வாங்குவது குறையும், ஏற்கனவே வாங்கிய கடனை செலுத்துவதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
இதற்கு ஏற்றார் போல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 13.5 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் இன்று துவங்கியுள்ள ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தைக் குறைவாக உயர்த்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயர்வுடன் இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications