தொடர்ந்து இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தலைமையில் இன்று நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், ஆறாவது முறையாக வட்டி குறைப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு கட்டாயம் செய்யலாம் என்றும் பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருக்கும் நிலையில், இதை மேம்படுத்த வட்டி குறைப்பு கட்டாயம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடப்பு நிதியாண்டில் 5 முறை ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.
வட்டி குறைப்பு கட்டாயம் இருக்கலாம்
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி விகிதம் 4.5 சதவிகிதமாக படு வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 5 முறை வட்டி விகிதத்தினை 135 அடிப்படை புள்ளிகளை குறைத்திருந்தாலும். இந்த முறையும் இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் வட்டி குறைப்பு கட்டாயம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரிதும் துவண்டு போயுள்ள பொருளாதாரத்தை மீண்டும், இது மீட்டெடுக்க உதவும் என்றும் கருதப்படுகிறது.
5 முறை வட்டி குறைப்பு
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் ஏற்கனவே 5 முறை வட்டி குறைப்பு செய்து, 5.15 சதவிகிதமாக உள்ளது. இது மேலும் குறைக்கப்படும் போது இன்னும் வட்டி விகிதங்கள் குறையும். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜிடிபியை அதிகரிக்க நடவடிக்கை
கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வட்டி குறைப்பு மேலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் என்றும், இதனால் ஜிடிபியையும் இது பெருக்க உதவும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த 2018ல் 7 சதவிகிதமாக இருந்த ஜிடிபி விகிதம், கடந்த ஜூன் காலாண்டிலேயே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாக சரிவடைந்தது. இதே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாகவும் சரிந்தது.
தொழில் துறை உற்பத்தியும் வீழ்ச்சி
இது தவிர கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் துறை உற்பத்தியும் மிக வேகமாக வீழ்ச்சி கண்டு வருகிறது. நாட்டில் பொருளாதார மந்தம் தலை விரித்தாடி வருகிறது. ஆக வளர்ச்சியை புதுப்பிக்க வட்டி குறைப்பு மட்டும் போதாது. போதுமான வளர்ச்சியை மீட்டெடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆக இந்த நேரத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்று வங்கியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை
தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சியில், மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்பரேட் வரி விகிதத்தையும் குறைத்தது. ஆனால் இத்தகைய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் கூட ஜிடிபி விகிதம் படு வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக வளர்ச்சிகள் மீண்டும் புத்துயிர் பெறும் வரை கட்டாயம் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் முன்னர் கூறியிருந்தது கவனிக்கதக்கது.
வட்டியை குறைக்கலாம்
இந்த நிலையில் இன்று நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.90 சதவிகிதமாக வட்டி விகிதம் குறையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. Reuters அளித்துள்ள அறிக்கையில் அடுத்தடுத்த கூட்டத்தில், ரிசர்வ் வங்கி மேலும் வட்டியை குறைக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அடுத்த 15 மாதங்களில் வட்டி விகிதம் 4 சதவிகிதமாக குறைக்கப்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர பலர் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தமானது அடுத்த ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications