இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் நிதிநிலையை ஆய்வு செய்யும் முக்கியமான நாணய கொள்கை கூட்டம் ஜூன் 4ஆம் தேதி துவக்க உள்ளது. இக்கூட்டத்தின் முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 6, 2025) வெளியாகியும் வேளையில், ஆர்பிஐ மூன்றாவது முறையாக தொடர்ந்து பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்தை கணிப்பின் படி ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை குறைத்தால் மக்கள் வங்கியின் வாங்கிய கடனுக்கும், வாங்கப்போகும் கடனுக்கும் வட்டி விகிதம் குறைந்து ஈஎம்ஐ தொகை குறையும். குறிப்பாக வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு இது பெரிய அளவில் பலன் அளிக்கும். இதேபோல் ப்ளோட்டிங் வட்டி விகிதம் கொண்ட அனைத்து கடன்களுக்கும் இந்த ரெப்போ விகித குறைப்பு பலன் அளிக்கம் என்பதால் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை குறைக்க முக்கியமான காரணமாக இருக்கப்போவது நாட்டின் பணவீக்கம் 4% என்ற இலக்கை விட குறைவாக இருப்பதும், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை நீடிப்பது தான். இவ்விரு முக்கிய பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ரெப்போ விகிதத்தை ஆர்பிஐ 3வது முறையாக குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC), ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த கூட்டம் ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நாணயக் கொள்கை கூட்டம் ஜூன் 4 துவங்குகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவு ஜூன் 6 அன்று அறிவிக்கப்படும். இதற்கு முன்பு, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் 2025 கூட்டத்தில் ஆர்பிஐ தலா 25 அடிப்படை புள்ளிகள் வீதம் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டு, தற்போது 6% ஆக உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாத நாணய கொள்கை முடிவில், நாணயக் கொள்கையின் நிலைப்பாட்டை "நடுநிலை"யில் இருந்து "தளர்வான" (accommodative) நிலைக்கு மாற்றியது.
பிப்ரவரி 2025 முதல் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில், பல வங்கிகள் தங்கள் EBLR மற்றும் MCLR வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இது கடன் வாங்குவோருக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது, மேலும் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ சுமை குறைத்துள்ளது. இதன் சாதகமான தாக்கம் மார்ச் காலாண்டு ஜிடிபி தரவுகளிலும் எதிரொலித்துள்ளது.
நாட்டின் ரீடைல் பணவீக்கம் 4% என்ற ஆர்பிஐ இலக்கை விட குறைவாக இருப்பது மூலம் RBI-க்கு வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் வகையில் RBI பணப்புழக்கத்தை (liquidity) மேம்படுத்த முடியும் என பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ் கூறினார். "பணவீக்க நிலைமைகள் மிதமாக உள்ளன, எனவே MPC ஜூன் 6 அன்று 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பை அறிவிக்கும்." என்று அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications