இன்று காலை நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்பதே பெரும்பாலான நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
ஏற்கனவே ரிசர்வ் வங்கி மொத்தம் கடந்த மே மாதத்தில் இருந்து 250 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வரையிலும் பணவீக்கம் என்பது உச்சத்தில் காணப்படுகிறது. ஆக மத்திய வங்கியானது பணவீக்க இலக்கினை எட்டும் வரையில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மானிட்டரி பாலிசி கூட்டத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டி உள்ளது. ஒன்று சில்லறை பணவீக்கம், இரண்டாவது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகளானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
ஆக இப்படி நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் தான் மத்திய வங்கியானது இன்று காலை 10 மணிக்கு தனது முக்கிய அறிவிப்பினை வெளியிடவுள்ளது. இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் என்பது கட்டாயம் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்தால், இதனால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சாமானியர்கள் எதிர்கொள்ளலாம் என்பதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஒரு புறம் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்காவிட்டால், அன்னிய முதலீடுகளானது தொடர்ந்து வெளியேறலாம். இது இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கலாம். இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
மறுபுறம் வங்கிகளையும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். ஏற்கனவே வட்டி விகிதம் உச்சத்தில் உள்ள நிலையில், வட்டி விகிதம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட முறை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த முறையும் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு சாமானிய மக்களுக்கு பிரச்சனையாக மாறக்கூடும்.

இதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மாதம் மாதம் செலுத்தும் தவணை தொகையை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். இது மேற்கொண்டு சாமானியர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம். இது மக்களின் நுகர்வினை குறைக்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக தேவையானது கடும் சரிவினைக் காணலாம்.
தேவை குறையும்போது அது உற்பத்தியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது சங்கிலித் தொடராக நிறுவனங்கள், பொருளாதாரம், உற்பத்தி வளர்ச்சி என பலவற்றிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தவும் இந்த வட்டி அதிகரிப்பானது வழிவகுக்கலாம்.


Click it and Unblock the Notifications