டெல்லி:தொடர்ந்து இந்தியாவில் வட்டி விகிதம் என்பது கடந்த பல மாதங்களாகவே உயர்ந்து வருகின்றது. இந்த வட்டி விகிதமானது இனியும் தொடர்ந்து வரவிருக்கும் கூட்டத்தில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவில் தொடர்ந்து சில்லறை பணவீக்கம் என்பது ரிசர்வ் வங்கியின் இலக்கான 6% மேலாகவே இருந்து வருகின்றது. இது மேற்கோண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து வட்டி அதிகரிப்பு
அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த மே 20220-ல் இருந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பணவீக்கம், சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலை, சர்வதேச சந்தையில் நிலவி வரும் நெருக்கடி நிலையால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கம் என பலவும் தொடர்ந்து வட்டி விகிதத்தில் எதிரொலித்து வருகின்றது.
பணவீக்கம் Vs வட்டி அதிகரிப்பு
இந்த நிலையில் வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கப்பட்டு, 6.50% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து பணவீக்கம் 6% கீழாக வரும் வரைவில் இந்த அதிகரிப்பானது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோர் விலை குறியீடு
இதே நுகர்வோர் விலை குறையீடு குறித்தான விகிதமானது 6.52% ஆக ஜனவரியில் அதிகரித்துள்ளது. இதே கடந்த பிப்ரவரியில் 6.44% ஆக குறைந்துள்ளது. எனினும் தொடர்ந்து 6% மேலாக இருந்து வருகின்றது. மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பணவீக்கம் விகிதம் ஏற்கனவே 6-ஐ நெருங்கியுள்ள நிலையில், இந்த முறை கட்டாயம் அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம்
சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியானது அதன் வட்டி விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில், அதனை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியும் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு அன்னிய முதலீடுகள் வெளியேறாமல் தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மானிட்டரி பாலிசி கூட்டம்
இந்திய ரிசர்வ் வங்கியின் 2024ம் நிதியாண்டில் நடக்கவுள்ள முதல் மானிட்டரி பாலிசி கூட்டமானது ஏப்ரல் 3 - 6 அன்று நடக்கவுள்ளது. இதனிடையே ஏப்ரல் 6 அன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்தினை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications