இந்திய ரிசர்வ் வங்கி அதன் இருமாத நாணய கொள்கைக் குழுவின் மூன்று நாள் கூட்டம் ஏப்ரல் 3,5,6 தேதிகளில் நடைபெறும் நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி அதாவது நாளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான MPC குழு பெஞ்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புள்ளது. சந்தை கணிப்பின் படி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் என்ன ஆகும்..? ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் அதற்கு என்ன காரணமாக இருக்கும்..?
ரிசர்வ் வங்கி இருமாத நாணய கொள்கைக் கூட்டத்தின் முடிவுகளை நாளை காலை 10 மணிக்கு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பார், அதைத் தொடர்ந்து மதியம் செய்தியாளர் சந்திப்பு நடக்கும். புதிய நிதியாண்டின் முதல் இருமாத நாணய கொள்கை கூட்டம் இது என்பதால் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ஒரு வருடத்தில் ஆறு இருமாத நாணய கொள்கை கூட்டத்தை நடத்தும், அவசர காலங்களில் ரிசர்வ் வங்கி கூடுதல் கூட்டங்களை நடத்துவது இயல்பு. இந்த நிலையில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தின் போது ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.5 சதவீதமாக உயர்த்தியது.
இதன் மூலம் அனைத்து வங்கிகளிலும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து மக்கள் வாங்கிய கடனுக்கு அதிகப்படியான வட்டி தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. நாளை மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தினால் கட்டாயம் கூடுதலாக உயரும். இதுவரை, ரிசர்வ் வங்கி, மே 2022 முதல் மொத்தம் 250 அடிப்படை புள்ளிகளால் ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது.

வட்டி விகிதங்களை உயர்த்துவது மூலம் சந்தையில் உருவாகும் தேவையை குறைக்க முடியும். இதன் மூலம் நாட்டின் பணவீக்கத்தை குறைய உதவுகிறது. இந்த பார்மூலா-வை உலகின் ஒவ்வொரு நாட்டுன் மத்திய வங்கியும் பயன்படுத்தி வருவதோடு பொருளாதார மந்தநிலையை சரி செய்ய கடந்த 8 மாதத்தில் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் பல நாடுகள் தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் பணவீக்கம் அதிகப்படியாக 6 சதவீதம் இருக்க வேண்டும் என்பது ஆர்பிஐ லிமிட், ஆனால் ஜனவரி மாதம் 6.52 சதவீதமாகவும், பிப்ரவரி 6.44 சதவீதமாகவும் உள்ளது. இதனால் ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி நடந்த ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கும் என்றும் ரெயூட்டர்ஸ் கருத்து கணிப்பில் 62 பேரில் 49 பேர் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என கணித்து வாக்களித்துள்ளனர்.

OPEC நாடுகள் 1.16 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு குறைப்பதாக அறிவித்துள்ளது, இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூவம் கட்டாயம் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் உயரும் நிலை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பணிவீக்கம் அதிகரிக்கும் இதனால் ரெப்போ விகிதம் உயரும் நிலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாளை ஆர்பிஐ தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிடும் வேளையில் இன்று SBI ஆராய்ச்சி பிரிவின் Ecowrap அறிக்கையின்படி, RBI அதன் வட்டி விகித உயர்வை தற்காலிகமாக நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் கூட்டத்தில் ரெப்போ விகித உயர்வை இடைநிறுத்த ரிசர்வ் வங்கிக்கு போதுமான காரணங்கள் இருப்பதாக அறிக்கை வலியுறுத்தியது.
ஆலோசனை நிறுவனமான எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் படி, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. ஆனால் ரெயூட்டர்ஸ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கணிப்பில் ஏப்ரல் மாதம் உயர்த்திவிட்டு 2023 ஆம் ஆண்டில் இனி வட்டி விகிதத்தை உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கணித்திருந்தது.


Click it and Unblock the Notifications