ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று 8 தேதி கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் முதல் முறை இரு மாத நாணய கொள்கை கூட்டம் மட்டும் அல்லாமல் மத்திய பட்ஜெட்-க்குப் பின் நடக்கும் நாணய கொள்கை கூட்டம் என்பதால் இக்கூட்டத்தின் முடிவுகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
ஆர்பிஐ கவர்னர் 10 மணிக்கு நேரலை மூலம் இரு மாத நாணய கொள்கை முடிவுகளை வெளியிட உள்ளார்.
சில்லறை பணவீக்கம்
டிசம்பர் 2022ல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியமான காரணம் உணவுப் பொருட்களின் விலை குறைவு தான். இது நவம்பரில் 5.88 சதவீதமாகவும், 2022 அக்டோபரில் 6.77 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க வரம்பு இலக்கான 4- 6 சதவீத அளவிற்குள் பணவீக்கம் வந்த நிலையில் ஜனவரி 2022 முதல் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என அதிகளவில் நம்பப்படுகிறது.
நவம்பர் மாதம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.88 சதவீதமாகவும், டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
சக்திகாந்த தாஸ்
இதன் மூலம் இன்று இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிக்க வேளையில் வட்டி உயர்வுக்கான வாய்ப்பு 50:50 சான்ஸ் ஆக உள்ளது. கரணம் அமெரிக்க மத்திய வங்கி தனது சமீபத்தில் நாணய கொள்கையில் வேலைவாய்ப்புத் தரவுகள் சிறப்பாக இருந்த போதிலும் உயர்த்தியது.
ரெப்போ விகிதம்
பிப்ரவரி 6 துவங்கிய இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மத்திய வங்கிகள்
இதேவேளையில் உலகின் முன்னணி மத்திய வங்கிகளைப் போலவே, ரிசர்வ் வங்கியும் வட்டி விகித உயர்வை இந்தக் கூட்டத்தில் நிறுத்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இதுநாள் வரையில் அறிவிக்கப்பட்ட வட்டி விகித உயர்வுக்கு முழுமையான பலன் கிடைத்த பின்பு வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மத்திய வங்கி
அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழையும் என்ற அச்சம் அனைத்து தரப்பினரையும் பாதித்து வரும் வேளையில் புதன்கிழமை அந்நாட்டின் மத்திய வங்கி வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது. இதனால் இதனுடைய தாக்கமும் இருக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications