மத்திய அரசின் நிதி நிலையை மேம்படுத்தும் உற்சாகமூட்டும் செய்தி இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து வெளியாகியுள்ளது. இன்னும் சில வாரத்தில் இந்தியாவில் அடுத்த 5 வருடம் யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பது தெரிய வரும் வேளையில், ஆர்பிஐ அறிவிப்பு மத்திய அரசின் கஜானா-வை நிரப்ப உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகள் வாயிலாக, கடந்த ஆண்டை விட அதிக அளவிலான டிவிடெண்ட் தொகையை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை அரசுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது மத்திய அரசின் நிதி பற்றாக்குறைக்குத் தீர்வாக இருக்கும். இதேபோல் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கான செலவுகளை மேற்கொள்ளவும் நிதி ஆதாரம் கிடைப்பதை உறுதி செய்யும்.

குறைக்கப்பட்ட கடன் வாங்குதல்: இந்த எதிர்பார்ப்புக்குக் காரணமாக இருப்பது ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகள் தான். அதில் முக்கியமாகக் கடந்த வாரம், மத்திய அரசுக் கருவூல பத்திரங்கள் (Treasury Bills) மூலமாக கடன் வாங்கும் அளவை ஆர்பிஐ கணிசமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம், குறுகிய கால கடன் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த கருவூல பத்திரங்கள் மூலம் மத்திய அரசு திட்டமிட்டிருந்த ₹60,000 கோடி நிதியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
முன்கூட்டியே கடன் திருப்பிச் செலுத்தல்: அதே நேரத்தில், அரசு முன்னதாக வாங்கிய 60,000 கோடி ரூபாய் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை அமைந்துள்ளது.
பொதுவாகத் தேர்தல் காலங்களில் அரசின் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுவது வழக்கம். தற்போது தேர்தல் காரணமாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இந்த ₹60,000 கோடி நிதியை முன்கூட்டியே கடன் திருப்பிச் செலுத்துவதற்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி ஆதரவளிப்பதாகவும் தெரிகிறது.
ரிசர்வ் வங்கி டிவிடெண்ட் அறிவிப்பு எப்போது?: ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் கடன் மேலாண்மை அமைப்பாக விளங்குகிறது. வங்கியின் லாபத்தில் இருந்து ஒரு பகுதியை அரசுக்கு டிவிடெண்ட் தொகையாக வழங்குவது வழக்கம்.
பொதுவாக இந்த டிவிடெண்ட் தொகை மே மாத இறுதியில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு, மே மாத இறுதியில் ரிசர்வ் வங்கி அதன் நிதி நிலையைக் கணித்து, அதில் பெரும் பகுதியை அரசுக்கு டிவிடெண்ட் தொகையாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கனிக்கா பஸ்ரிச்சா அண்மையில் வெளியிட்ட ஆராய்ச்சிக் குறிப்பில், "ரிசர்வ் வங்கி நிதி ஆண்டிற்கு ₹1 லட்சம் கோடி அரசுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். ரிசர்வ் வங்கி டிவிடெண்ட் கணக்கீட்டில் பல காரணிகள் இருந்தாலும், வலுவான டிவிடெண்ட் தொகை வழங்குவது மீண்டும் காணும் வாய்ப்பு உள்ளது என தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications