இந்தியாவின் மத்திய வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் எதற்காக அறிமுகம் செய்ததோ, அதன் பணிகள் முழுமை அடைந்த நிலையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே பண புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்து மக்கள் வங்கி கிளைகளில் செப்டம்பர் 30 வரையில் மக்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளது.
பணமதிப்புழப்பு நடவடிக்கை போல் அல்லாமல் இந்த இடைப்பட்ட காலத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் எவ்விதமான கட்டுப்படும் தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எப்போது இது முழுமையாக செல்லாது என்பது குறித்து எவ்விதமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் பல்வேறு முக்கியமான விஷயத்திற்கு பதில் அளித்த நிலையில், ஆர்பிஐ அதிகாரிகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சந்தையில் இருக்கும் பெரும்பாலான 2000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்கு வரவில்லை எனில் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என கூறியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ எடுத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறும் நடவடிக்கையில் பெரும்பாலான நோட்டுகள் திரும்ப வந்துவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கவோ அல்லது 2000 ரூபாய் நோட்டு இனி செல்லாது என்று அறிவிப்பிதற்கான தேவை இருக்காது என ஆர்பிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
இதேுபோல் வெளிநாட்டில் இருப்பவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பின், இக்குறித்த காலக்கட்டத்திற்கு மாற்ற முடியாத நிலை உருவாகும். இவர்களுக்கு ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறும் அளவுகளை பொறுத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, ரூபாய் நோட்டுகளுக்கான ஆதாரம் தெரிவிக்கும் வகையில் கட்டமைப்பை மாற்றி அதன் பின்பு திரும்ப பெரும் கட்டமைப்பை கொண்டு வரலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இவை அனைத்துமே சந்தையில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறும் அளவீட்டின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். மேலும் இது நாட்டின் மொத்த பண புழக்கத்தில் 10.8 சதவீதமாகும்.
எஸ்பிஐ வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை பெற எவ்விதமான படிவமும், அடைய அட்டையும் தேவையில்லை என கூறிய நிலையில் டெபாசிட் தொகை எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் நாட்டின் பணப்புழக்கம் பாதிக்க கூடாது என்பதற்காகவும், வங்கியில் எவ்விதமான ஆப்ரேஷனல் பிரச்சனை வர கூடாது என்பதற்காகவும் இந்த முடிவு எடுத்துள்ளது.
மக்கள் அனைவரும் வங்கிகளில் மே 23 ஆம் தேதி முதல் ஒரு முறை 20000 ரூபாய் வீதம் ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி கொடுத்த விதிமுறையை பிற வங்கிகளும் பின்பற்ற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications