கடந்த ஐந்து மாதங்களில் 4 முறை வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது டிசம்பர் மாதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தொடரலாம் என மதிப்பிட்டுள்ளது.
வளர்ச்சி சரியலாம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய திட்டங்களின மதிப்பு 4.75 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் காலாண்டில் 5.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும், கடன் வளர்ச்சி இரட்டை இலக்கில் உள்ளது. அதே சமயம் பணவீக்கத்தினால் வணிக வளர்ச்சியானது குறையவும் என வாய்ப்பிருக்கிறது என எஸ்பிஐ கூறியுள்ளது.
வட்டி அதிகரிக்கலாம்
இது குறித்து எஸ்பிஐ ஈகோரேப் ஆர்பிஐ ரேட் ஹைக் என்ற அறிக்கையினை வெளியிட்டது. இதில் டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐயின் இந்த அறிவிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பினை செய்த நிலையில் வந்துள்ளது.
பணவீக்கம்
மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 6.7% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் பணவீக்கம் அதிகரித்திருந்த நிலையில், ஜனவரியில் இருந்து ஓரளவுக்கு நிலையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இஎம்ஐ அதிகரிக்கலாம்
இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு மத்தியில், இனி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இதனால் மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி உள்ளிட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications