இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மே 2022ல் இருந்து 6 முறை ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக உள்ளது. வருகிற ஏப்ரல் 3 - 6 ஆம் தேதி ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க மத்திய வங்கி அடுத்தடுத்து வங்கிகள் திவாலான நிலையிலும் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை அளவுகளை மையமாக வைத்து தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியது.
ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் இரு நாள் நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ள நிலையில், இக்கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையிலான MPC குழு என்ன முடிவெடுக்கும் என்பது தான் சாமானிய மக்கள் முதல் வர்த்தக துறையில் அனைவரின் கேள்வியாக உள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி மே 2022ல் இருந்து 6 முறை ரெப்போ விகிதத்தை உயர்த்தி தற்போது 6.50 சதவீதமாக இருக்கும் வேளையில், ஏப்ரல் மாத கூட்டத்தில் மீண்டும் 0.25 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.
ரெப்போ விகிதம்
ஏற்கனவே ரெப்போ விகிதம் தொடர் உயர்வால் கடனுக்கான வட்டி விகிதத்தை அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் அதிகரித்ததுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை வட்டி உயர்த்தப்பட்டால் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்ரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் வரையில் அனைத்திற்கும் வட்டி அதிகரிக்கும்.
ஈஎம்ஐ தொகை
வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தினால் புதிதாக கடன் வாங்குவோர் மட்டும் அல்லாமல் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் வட்டி விகிதமும் உயர்ந்து ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும். இது மக்களின் நிதி சேமிப்பில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் உருவாக்கும்.
பணவீக்கம்
இந்தியாவின் பணவீக்கம் அதிகப்படியாக 6 சதவீதம் இருக்க வேண்டும் என்பது ஆர்பிஐ லிமிட், ஆனால் ஜனவரி மாதம் 6.52 சதவீதமாகவும், பிப்ரவரி 6.44 சதவீதமாகவும் உள்ளது. இதனால் ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி நடக்கும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கும் என்றும் ரெயூட்டர்ஸ் கருத்து கணிப்பில் 62 பேரில் 49 பேர் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என கணித்து வாக்களித்துள்ளனர்.
அமெரிக்க மத்திய வங்கி
இதேபோல் இந்த முறை உயர்த்திய பின்பு நிதியாண்டு முழுவதும் வட்டி விகிதத்தை உயர்த்தாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, இதே முடிவில் தான் அமெரிக்க மத்திய வங்கியும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டாலர் ஆதிக்கம் குறையும் காரணத்தால் இறக்குமதி பொருட்களுக்கான செலவுகள் கணிசமாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications