போலி கடன் செயலிகளின் ஆட்டம் முடிந்தது.. ரிசர்வ் வங்கி உருவாக்கும் புதிய நிறுவனம்..!

இந்த டிஜிட்டல் மயமான வாழ்க்கையில் நிதி சார்ந்த பணிகள் அனைத்தும் வங்கியில் கடன் வாங்குவது முதல் பெட்டிக் கடையில் பணம் கொடுத்து பொருட்கள் வாங்குவது வரையில் இணையம் வழியாக செய்து வருகிறது.

இது வாழ்க்கை முறையை எளிதாக்கினாலும் பல புதிய பிரச்சனைகளை கொண்டு வருகிறது, இதில் மிகமுக்கியமான இணைய வழியாக நடக்கும் மோசடிகள். இதில் எளிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரையில் மாட்டிக்கொண்டு கடுமையாகப் பண இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

போலி கடன் செயலிகளின் ஆட்டம் முடிந்தது.. ரிசர்வ் வங்கி உருவாக்கும் புதிய நிறுவனம்..!

இந்த நிலையில் இந்தியாவில் இணையம் வழியாக நிதி மோசடிகள் அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கட்டுப்பாடு இன்றி தினமும் முளைத்து வரும் போலி கடன் செயலிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த புதிய நிறுவனத்தை உருவாக்கும் திட்டத்தில் ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த போலி கடன் ஆப்கள் மக்களுக்கு கடன் வழங்கி, பின்னர் அதனை திருப்பி செலுத்த மிரட்டல் விடுத்து முறைகேடாக நடந்துகொள்வது மட்டும் அல்லாமல், எளிய மக்களிடம் கடுமையான வட்டி வசூலித்தும் பிரச்சனையில் சிக்க வைக்கின்றன.

இது இந்தியாவின் நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வரும் வேளையில், மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் போலி கடன் செயலிகளின் செயல்பாட்டை முடக்கத் தீவிரமான முயற்சியில் இறங்கியது.

இதன் விளைவாக தற்போது டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களைச் சரிபார்த்து, அவற்றைப் பற்றிய பொது பதிவேட்டை (public register) பராமரிக்க "டிஜிட்டல் இந்தியா டிரஸ்ட் ஏஜென்சி" (Digital India Trust Agency - DIGITA) என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கும் யோசனையில் ரிசர்வ் வங்கி உள்ளது.

DIGITA-வின் 'Verified' சான்று இல்லாத கடன் செயலிகள் அங்கீகரிக்கப்படாதவை என கருதப்படும், இதன் மூலம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இது அமையும். இது டிஜிட்டல் துறையில் நடக்கும் நிதி குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIGITA நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களை ஆய்வு செய்து அவை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு இதற்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலங்களில் டிஜிட்டல் கடன் வழங்கும் துறையில் மோசடி நடவடிக்கைகள் மற்றும் முறைகேடான செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், DIGITA மூலம் மேற்கொள்ளப்படும் முழுமையான சரிபார்ப்பு செயல்முறை, டிஜிட்டல் கடன் வழங்கும் துறையில் புதிய மற்றும் ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரிசர்வ் வங்கி தடை செய்யப்பட்ட 442 டிஜிட்டல் கடன் வழங்கும் ஆப்களின் பட்டியலை தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் "வெள்ளை பட்டியலில்" (whitelist) இந்த ஆப்களை இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம், போலி கடன் ஆப்கள் மக்களை ஏமாற்றுவது தடுக்கப்படும்.

பிப்ரவரி மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் செப்டம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரையில் சுமார் 2200 டிஜிட்டல் கடன் செயலிகள் கூகுள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+