ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு (MPC) தனது முக்கிய வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார், இது எதிர்பார்க்கப்பட்ட முடிவாக இருந்தாலும் சந்தையில் சிறு சதவீதத்தினர் வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், பணப்புழக்க கொள்கை நிலைப்பாட்டை 'withdrawal of accommodation' நிலையை தொடர்வதாக ரிசர்வ் வங்கியின் MPC முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 5 முதல் 7 வரை நடைபெற்ற கூட்டத்தில், ஆறு பேர் கொண்ட குழுவில் நான்கு பேர் ரெப்போ விகிதத்தை 6.50 சதவிகிதத்தில் நிலைபடுத்த வேண்டும் என்று வாக்களித்தனர். 2 பேர் வழக்கம் போல் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.
மேலும் ஆர்பிஐ நாட்டின் பணவீக்கம் குறைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது. அதிக உணவுப் பொருள் விலை ஜூலை மாதத்திலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தாஸ் தெரிவித்தார். ஜூன் மாதத்தில் பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருந்தது. இது ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அதிகரித்தது.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் ஹைலைட்ஸ்:
- ரெப்போ விகிதம் 6.50 சதவீதத்தில் நிலைப்பெற்றுள்ளது.
- SDF விகிதம் 6.25 சதவிகிதமாகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75 சதவிகிதமாகவும் தொடர்கிறது.
- பணப்புழக்க கொள்கையில் ஆர்பிஐ தனது நிலைப்பாட்டை தொடந்து மாற்றமல் 'withdrawal of accommodation' நிலையை தொடர்வதாக ரிசர்வ் வங்கியின் MPC முடிவு செய்துள்ளது.
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கவனம் செலுத்தப்படும்.
- 2024-25 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாகவும், இரண்டாம் காலாண்டில் 7.2 சதவிகிதமாகவும், மூன்றாம் காலாண்டில் 7.3 சதவிகிதமாகவும், நான்காம் காலாண்டில் 7.2 சதவிகிதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு (MPC) 2024-25 நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை 4.5 சதவிகிதமாகவே தொடர்ந்துள்ளது. அதேசமயம், 2025-26 நிதியாண்டிற்கான பணவீக்கம் 4.4 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2024-25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான பணவீக்க கணிப்பு 3.8 சதவிகிதத்தில் இருந்து 4.4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டிற்கான கணிப்பு 4.6 சதவிகிதத்தில் இருந்து 4.7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டிற்கான கணிப்பு 4.5 சதவிகிதத்தில் இருந்து 4.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கவலை உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான பணவீக்க கணிப்பு 3.8 சதவீதத்தில் இருந்து 4.4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பருவமழை: நல்ல பருவமழை மற்றும் விவசாயம் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரத்தில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
- தொலைத்தொடர்பு கட்டணம் மற்றும் பால் விலை: இந்த இரண்டு பொருட்களின் விலைகளையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
- வீட்டுக் கடன்: இந்திய வங்கிகளில் வீட்டுக்கடன் தொடர்பான டாப் அப் கடன்கள் அதிகரித்து வருவதால் வங்கிகள் கவனமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
- அன்னிய செலாவணி கையிருப்பு: இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு இருப்பு அதிகரித்து 675 பில்லியன் டாலராக உள்ளது.
- தொழில்நுட்ப பாதுகாப்பு: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்ப தேவைகளுக்கான மூன்றாம் தரப்பை நம்புவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் மற்றும் சி-எட்ஜ் டெக்னாலஜி நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை மையமாக வைத்து ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார்.
இதர முக்கிய அறிவிப்புகள்
- டிஜிட்டல் கடன் பயன்பாடுகள்: இந்திய சந்தையில் அங்கீகரிக்கப்படாத லோன் ஆப்-களை தடுக்க டிஜிட்டல் கடன்களுக்கான பொதுவான தளத்தை உருவாக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.
- UPI பரிமாற்ற வரம்பு உயர்வு: UPI மூலம் ஒரு வரி தொடர்பான பரிமாற்றத்திற்குச் செய்யக்கூடிய தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- செக் செயல்பாடுகள் வேகப்படுத்துதல்: காசோலைகளை விரைவாகத் தீர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications