நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 9.5% வீழ்ச்சி காணலாம் என்று ரிசர்வ வங்கி கூட்டத்தில் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜிடிபி விகிதம் சரியலாம். எப்படி எனினும் அடுத்து வரும் நான்காவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி காணலாம் என்றும் தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸூடன் இந்தியா போராடி வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் ஒரு தீர்க்கமான கட்டத்தில் நுழைகிறது. கிராமப்புற பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் காணப்படுகின்றது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான நிலையை கண்டது. எனினும் தற்போது நாடு தழுவிய லாக்டவுனில் படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகின்றது. இதன் காரணமாக இனி வரும் காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் சற்றே மேம்படலாம். எப்படி இருப்பினும் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 9.5% சரியலாம் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கி வங்கி மட்டும் அல்ல, மற்ற மதிப்பீட்டு நிறுவனங்களும் சரியலாம் என்று கணித்து வருகின்றன.
தற்போது பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், வளர்ச்சி மிக மெதுவாகவே காணப்படுகிறது.

நிபுணர்கள் இந்த வீழ்ச்சியானது கொரோனாவின் காரணமாக மட்டும் அல்ல, கொரோனாவிற்கு முன்பே பொருளாதாரம் கடுமையான சரிவினைக் கண்டுள்ளது. எனினும் கடந்த மே மாதத்தில் இந்திய அரசு பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்கத்தினை கொடுத்தது. ஆனால் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாயாவது நிதி ஊக்கத்தினை கொடுக்க வேண்டியிருக்கும். ஆக அரசின் கூடுதலான ஊக்கத்தொகையானது, ஆழ்ந்த வீழ்ச்சியில் இருந்து இந்தியாவினை காப்பாற்றும். எனினும் அரசாங்கத்தின் பலவீனமான நிதியினையும் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்தன.
இதற்கிடையில் தான் தற்போது ஆர்பிஐ வட்டி விகிதத்தில் ஏதும் மாற்றம் செய்யவில்லை. இது 4%மாகவே உள்ளது. இதே போல ரிவர்ஸ் விகிதத்தினையும் மாற்றம் செய்யவில்லை.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications