ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் கடந்த 6ம் தேதியன்று தொடங்கிய நிலையில், இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்திலும் வட்டி விகிதம் எதிர்பார்த்ததை போலவே 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
நடப்பு காலண்டர் ஆண்டில் நடக்கும் முதல் நாணய கொள்கை கூட்டம் இதுவாகும். ஆக இந்த கூட்டத்தில் மத்திய வங்கி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது. பணவீக்கமானது ஆர்பிஐ-யின் இலக்கிற்குள் வந்திருந்தாலும், இது கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக இருந்து வரும் நிலையில் மத்திய வங்கி என்ன செய்யப்போகிறது என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
வட்டி அதிகரிக்கலாம்
இன்று காலை வெளியாகவுள்ள இந்த அறிவிப்பில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் 2022 கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 35 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இது தொடர்ந்து கடந்த ஆண்டில் பல முறை அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் இந்த முறையும் 0.25% வட்டி அதிகரித்து, 6.50% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
என்ன பிரச்சனை?
சர்வதேச சந்தையில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பணவீக்கம் என்பது குறையத் தொடங்கியிருந்தாலும், தொடர்ந்து இன்னும் கூட சற்று உச்சத்தில் இருந்து வருகின்றது. அதோடு அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கடந்த முறை 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தது. ஆக அதன் எதிரொலியாக இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
எனினும் இந்தியாவில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ள நிலையில், பணவீக்கம் என்பது சாதகமான ஒரு இடத்தில் உள்ளது. அதேசமயம் சர்வதேச பொருளாதாரம் என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. ஆக முதலீடுகள் வெளியேறாமல் இருக்க வட்டி அதிகரிப்பு என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு பணவீக்கம்
குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நிலவி வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில், வட்டி விகிதம் என்பது தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவினை பொறுத்தவரையில் தொடர்ந்து உணவு பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. ஆக இதுவும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.


Click it and Unblock the Notifications