ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று காலை வெளியாக உள்ள நிலையில், 0.35% முதல் 0.50 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி உள்ளிட்ட பல வெளிநாட்டு மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
செப்டம்பர் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெற்று வந்த நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் இன்று காலை அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்
இப்போது ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக உள்ளது. ரெப்போ வட்டி என்றால் ஆர்பிஐயிடம் இருந்து வங்கிகள் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஆகும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்றால் வங்கிகளிடம் இருந்து ஆர்பிஐ பெற்ற கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் என்ன ஆகும்?
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் சாமானிய மக்கள் வங்கிகளில் வாங்கிய கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயரும். அதே நேரம் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு அதிகம் லாபத்தை வழங்கும். எனவே ரெப்போ வட்டி விகிதம் அறிவிப்பு மீது மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
மோர்கன் ஸ்டான்லி
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தி 5.9 சதவீதமாக அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் பணவீக்கம் 7.1 முதல் 7.4 சதவீதமாக இருக்கும் எனவும் மோர்கன் ஸ்டான்லி கனித்துள்ளது. இதுவே 2023, ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் 6 சதவீதமாக குறையலாம் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 10 வருடங்கள் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 5 சதவீதமாக உள்ளது எனவும் தரவுகள் கூறுகின்றன. டிசம்பர் மாதம் இது 3 சதவீதமாகக் குறையலாம் என மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை
பங்குச்சந்தைக்கும் வட்டி விகித உயர்வுக்கு மிகப் பெரிய தொடர்பு உண்டு. ஒவ்வொரு முறை ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும் போதும் அதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் பிரதிபலிக்கும். ரெப்போ வட்டி விகித உயர்வால் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன்களின் செலவு அதிகரிக்கும். எனவே வட்டி விகித உயர்வின் போது கடனில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் பங்குகள் சரிய அதிக வாய்ப்புகள் உண்டு.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications