4% ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த 6வது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் மற்றும் சந்தையின் டிமாண்ட் ஆகிய முக்கியக் காரணங்களை முன்வைத்து வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை.

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 45,000 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

நாணய கொள்கை

நாணய கொள்கை

6வது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் 4 சதவீதமாகத் தொடர முடிவு செய்துள்ளது. இதனால் ரீடைல் வங்கிகளில் எவ்விதமான வட்டி மாற்றமும் இருக்காது. மேலும் வீட்டுக்கடன், வாகன கடன் என அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் தற்போது இருக்கும் இதே அளவு தொடரும்.

ஆனால் வங்கி நிர்வாகம் முடிவு எடுக்கும் பட்சத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும்.

 

பொருளாதாரம் கணிப்பு

பொருளாதாரம் கணிப்பு

இந்தியப் பொருளாதாரம் ஜூன் காலாண்டில் -23.9 சதவீதமும், செப்டம்பர் காலாண்டில் -7.5 சதவீதமும் அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் முடிவில் பொருளாதார வளர்ச்சி -9.5 சதவீத அளவில் இருக்கும் என முன்பு கணித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி இன்றைய நாணய கொள்கையில் 2021நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கி இலக்கை விடவும் அதிகமாக இருக்கும் நிலையில் 2021 நிதியாண்டின் 3வது காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் அளவீடு 6.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது.

டிமாண்ட்

டிமாண்ட்

செப்டம்பர் மாதம் வரையில் நாட்டின் உற்பத்தி அளவீடுகள் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நவம்பர் மாதம் உற்பத்தி அளவீடுகள் குறைந்து இந்தியாவில் டிமாண்ட் அளவு குறைந்துள்ளது.

இந்த நிலையில் வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் நன்மை இல்லை என்பதை உணர்ந்து ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைக்கவில்லை.

 

வளர்ச்சி திட்டங்கள்

வளர்ச்சி திட்டங்கள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்குத் தேவையான வட்டி குறைப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ள நிலையிலும் முழுமையான வளர்ச்சி அடையாத காரணத்தால் இந்தியச் சந்தைக்கு இன்னும் அதிகமான வர்த்தக வளர்ச்சி அடைய அதிகமான வளர்ச்சி திட்டங்கள் தேவை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

115 அடிப்படை புள்ளிகள்

115 அடிப்படை புள்ளிகள்

இந்திய ரிசர்வ் வங்கி கொரோனாவால் பாதித்த இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிப்ரவரி மாதம் முதல் சுமார் 115 அடிப்படை புள்ளிகள் அதாவது 1.15 சதவீதம் அளவிலான ரெப்போ விகிதத்தைக் குறைந்துள்ளது.

இதனால் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தி சேவைப்படும் போது வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

 

ரீடைல் பணவீக்கம்

ரீடைல் பணவீக்கம்

நாட்டின் நுகர்வோர் பணிநீக்கம் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ரீடைல் பணவீக்கம் கடந்த 9 மாதமாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அக்டோபர் மாதம் அதன் அளவு 7.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியக் காரணம் உணவு பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை உயர்வு தான்.

மே 2014ல் நாட்டின் ரீடைல் பணவீக்கத்தின் அளவு 8.33 சதவீதமாக இருந்தது, இதுதான் வரலாற்று உச்ச அளவாகும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+