இந்தியாவின் நிதி நிலை மற்றும் பணப் புழக்கத்தைச் சரி செய்யும் ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகள், கேள்விகளுக்கு மத்தியில் இன்று துவங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டம் ஜூன் 2ஆம் தேதி, அதாவது இன்று துவங்கி ஜூன் 4ஆம் தேதி முடிய உள்ளது.
கொரோனா 2வது அலை இந்திய பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ள வேளையில் நாணய கொள்கை கூட்டம் நடை பெற உள்ளது. சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது, இதன் வாயிலாக ரிசர்வ் வங்கி சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும் எனக் கணிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டம்
இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும், இதனால் ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதம் அளவீட்டைத் தொடரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு
காரணம் தற்போதைய நாட்டின் வர்த்தகம், பொருளாதாரச் சூழ்நிலையில் வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் பெரிய அளவிலான நன்மைகள் இருக்காது. இதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வட்டி தளர்வுக்கான வளர்ச்சியும், வர்த்தகமும் சந்தை உருவாக்க முடியாமல் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது.
பணவீக்கம் முக்கியப் பிரச்சனை
ஆனால் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கட்டாயம் முக்கியமான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுக்கும் எனவும், இதற்கான அறிவிப்புகள் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் நாட்டின் பணப் புழக்கத்தை அதிகரிக்க முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
கடன் சலுகை கிடைக்குமா..?!
மேலும் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர் வரையில் அனைத்து தரப்பினரும் கேட்டு வரும் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதில் சலுகை-க்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனைவருக்கும் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்புத் திட்டம்
ஆனால் இந்தக் கூட்டத்தின் முடிவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைக் கூடுதலாக விரிவாக்கம் செய்யச் சில வாய்ப்புகள் உள்ளது, ஆனால் இதை ரிசர்வ் வங்கி அறிவிக்குமா என்பது கேள்விக்குறி தான்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications