இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நிதிக் கொள்கை முடிவை வெளியிடப்படுகிறது.
மத்திய வங்கி பணவீக்க அச்சுகளுக்கு மத்தியில் ரெப்போ விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வைத்திருக்கும் என்றும், வெள்ளிக்கிழமை அதன் கொள்கை நிலைப்பாட்டை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வெளியிடும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஆனால் இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க கடன் பத்திரங்கள் மீதான முதலீடுகள் அதிகரிப்பு போன்ற உலகளாவிய பிரச்சனைகள் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை பாதிக்கும் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால் ரூபாய் மதிப்பு சரிவை ஈடுக்கட்ட முக்கிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.
சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா OPEC+ நாடுகளின் ஒரு பகுதியாக தானாக முன்வந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்த நிலையில், இதன் விலை 10 மாத உயர்வை எட்டியுள்ளது. சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா 2024 ஆம் ஆண்டு இறுதி வரை 1.3 மில்லியன் பேரல் உற்பத்தியை குறைப்புகளை நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இது இந்தியாவின் பொளாதார வளர்ச்சி மட்டும் அல்லாமல் சர்வதேச பொருளாதாரத்தையும் பாதிக்கும். இப்படியிருக்கையில் ஆர்பிஐ முடிவு மிகவும் முக்கியமானதாக உள்ளது. அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைப்பதாக தெரியவில்லை.
இதுவும் ரூபாய் மதிப்பில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முதலீடாளர்களுக்கு சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது. மேலும் இந்திய பொருளாதாரம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் செப்டம்பர் காலாண்டிலும் இது நீடித்துள்ளதா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications