இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கிய இன்று முடிவை வெளியிடப்படுகிறது. ரிசர்வ் வங்கி பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் ரெப்போ விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வைத்திருக்கும் என கூறப்பட்டாலும், கணிசமான வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது.
இதேவேளையில் சந்தையில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பண புழக்கம் இருக்கும் காரணத்தாலும், உயரும் CRR விகிதம் மூலம் கூடுதலாக வர உள்ள 50000 கோடி ரூபாய் பணபுழக்கம் மூலம் போதுமான நிதி ஆதாரம் சந்தையில் உள்ளது. ஆனால் சில்லறை பணவீக்க கணிப்புகள் முக்கிய பங்கு விகிக்கிறது.

இதனால் ரெப்போ விகிதத்தையும், நாணய கொள்கையை தொடர்ந்து இருக்கமாக வைக்க சில முக்கிய காரணங்கள் உள்ளது.
உணவு பணவீக்கம்: ஜூலை - செப்டம்பர் காலாண்டில் உணவு பணவீக்கம் 11- 13 சதவீதம் உயர வாய்ப்பு இல்லை என்றாலும் மாறுப்பட்ட மழை பொழிவு உணவு பணவீக்கத்தை உயர்வாகவே வைத்துள்ளது. இதேபோல் சர்வதேச அளவிலான பல பிரச்சனைகள் எண்ணெய் விதைகளின் விலையை உயர்வாகவே வைத்துள்ளது. இதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளை தளர்க்க முடியாது அதாவது ரெப்போ விகிதத்தை குறைக்க முடியாது.
சில்லறை பணவீக்கம்: இந்தியாவின் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. குறிப்பாக ஆர்பிஐ-யின் இலக்கான 4 சதவீத்திற்கு அதிகமாகநே உள்ளது, இதனால் நாணய கொள்கையில் தளர்வு அளிக்க வாய்ப்புகள் குறைவு.

அமெரிக்க பத்திர முதலீடுகள்: அமெரிக்க பத்திர முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும் காரணத்தால் ஆர்பிஐ குறைந்த பட்சம் டிசம்பர் காலாண்டு வரையிலாவது ரெப்போ விகிதத்தை உயர்வாகவே வைத்திருக்க வேண்டும்.
இதை தாண்டி மத்திய அரசின் நிதி பற்றாக்குறை இலக்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவையும் முக்கிய பங்கீட்டை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications