இந்தியாவில் பணவீக்க விகிதமானது அச்சுறுத்தும் விதமாக 7% மேலாக இருந்து வரும் நிலையில், கட்டாயம் இந்த முறையும் வட்டி விகிதம் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதனைபோல ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் இந்த நடவடிக்கையினால் விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
முன்னதாக ரிசர்வ் வங்கி கூட்டம் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கிய நிலையில் மூன்றாவது நாளாக இன்று முடிவடையவுள்ளது.
இதற்கிடையில் மூன்றாவது நாள் கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரெபோ விகிதம் அதிகரிப்பு
இதற்கிடையில் மூன்றாவது நாள் கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்பார்த்ததை போல வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.4% ஆக அதிகரித்துள்ளது.
மற்ற விகிதங்களின் நிலவரம்?
இதே எஸ்டிஎஃப் விகிதம் (SDF) 5.15% ஆக உள்ளது. இதே MSF மற்றும் வங்கி விகிதம் 5.65% ஆக மாற்றப்பட்ட்டுள்ளது. ரெபோ விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. இது ஆகஸ்ட் 2019க்கு அதிகமாகும்.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பணவீக்க விகிதமானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது. இதனால் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகரத் தொடங்கினர். கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 13.3 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
கடன் விகிதம்?
மத்திய வங்கியின் வட்டி விகிதமானது அதிகரித்துள்ள நிலையில், விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மாத தவணை செலுத்துவோருக்கு இன்னும் கூடுதல் சுமையை தரலாம். புதியதாக கடன் வாங்குவோரும் அதிக வட்டி விகிதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications