ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 10வது முறையாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்திலும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.

இதனால் 10வது முறையாக சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதமாகவும் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 பணவீக்கம்

பணவீக்கம்

நடப்பு நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்கம் 5.3 சதவீதமாகவும்,
2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதில் 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.9 சதவீதமாகவும், 2வது காலாண்டில் 5 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 4 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 4.2 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

 

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

மேலும் 2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் ரியல் ஜிடிப் அளவு 7.8 சதவீதமாக இருக்கும் எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதில் 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 17.2 சதவீதமாகவும், 2வது காலாண்டில் 7 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 4.3 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 4.5 சதவீதமாகவும் இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது.

 

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

நாட்டின் பணவீக்கம் திட்டமிட்ட இலக்கிற்குள் இருந்தாலும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் உணவு பொருட்களின் விலை நாட்டின் வளர்ச்சிக்குச் சுமையாக உள்ளது என என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கூடுதலான மூலதன ஆதாரம்

கூடுதலான மூலதன ஆதாரம்

தன்னார்வத் தக்கவைப்புத் திட்டத்தின் (FPI - Voluntary Retention Scheme) கீழ் வரும் வரம்பு 1.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து ரூ.2.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசாங்கப் பத்திரங்கள் உட்பட உள்நாட்டு கடன் சந்தைகளுக்குக் கூடுதலான மூலதன ஆதாரங்களைக் கிடைக்கும்

நாணய கொள்கைக் குழு

நாணய கொள்கைக் குழு

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட நாணய கொள்கைக் குழு-வின் (எம்பிசி) இருமான நாணய கொள்கை கூட்டம் முடிந்துள்ள நிலையில், இக்கூட்டத்தில் வட்டி உயர்வு குறித்து எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானத்தை இன்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறைக்கக் கட்டாயம் என்பதால் ரிசர்வ் வங்கி இன்று வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 10வது முறையாக வட்டி விகிதம் மாறாமல் உள்ளது. மத்திய வங்கி கடைசியாக மே 22, 2020 அன்று வட்டி விகிதத்தை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+