இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முக்கியமான முடிவுகள் எடுத்துள்ளது.
அமெரிக்கா அரசு தனது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக விளங்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 0.75 சதவீதம் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் இந்திய சந்தையில் இருக்கும் முதலீடுகளும் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளது.
ரெப்போ விகிதம்
இரு மாத நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் SDF விகிதம் 5.65 சதவீதமாகவும், வங்கி விகிதமான MSF 6.15 சதவீதமாக உயர்வு - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.
ஜிடிபி வளர்ச்சி
2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அளவு 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைத்துள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஜிடிபி விகிதத்தில் சரிவு ஏற்பட்டு உள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கம்
2023ஆம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்க அளவில் எவ்விதமான மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், 2023ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ
இன்றைய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
உலக நாடுகள்
சமீபத்தில் வட்டி விகிதத்தை உயர்த்திய நாடுகள் அமெரிக்கா - 0.75 சதவீதம், தென்னாப்பிரிக்கா - 0.75 சதவீதம், ஐக்கிய அரபு நாடுகள் - 0.75 சதவீதம், சவுதி அரேபியா - 0.75 சதவீதம், ஹாங்காங் - 0.75 சதவீதம், பிலிப்பைன்ஸ் - 0.50 சதவீதம், இந்தோனேசியா - 0.50 சதவீதம், சுவிட்சர்லாந்து - 0.75 சதவீதம், நார்வே - 0.50 சதவீதம், தைவான் - 0.12.5 சதவீதம்.


Click it and Unblock the Notifications