ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிவில் மக்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமாக ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் அறிவித்துள்ளது.
இதனால் வங்கியில் கடன் வாங்கிய அனைவருக்கும் தங்களது வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இதேபோல் வங்கி டெபாசிட் திட்டம் மூலம் வருமானம் பார்க்கும் பலர் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் வட்டி விகித உயர்வு இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ஏமாற்றம் அளித்துள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் தளர்வுகள் நம்பி தான் வளர்ச்சி அடைந்து வருகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம்
கொரோனா தொற்றுக்கு முன்பே இந்திய பொருளாதாரம் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்காக ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என ஆலோசனை செய்து வந்தது. ஆனாஸ் கொரோனா பாதிப்பு இந்த வட்டி குறைப்பைக் கட்டாயமாக்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி
இதன் மூலம் கொரோனா முதல் அலை துவங்கியதில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் வங்கியில் கடன் வாங்கியவர்கள் அனைவரும் வரலாறு காணாத லாபத்தை அடைந்தனர்.
2வது அலைக்குப் பின்
ஆனால் 2வது அலைக்குப் பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் இன்று நடக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் கணிப்புகள் வெளியாகியிருந்தது.
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை
ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் முடிந்த நிலையில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 3.35 சதவீதம் என எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு நாணய கொள்கை கூட்டத்தில் 5:1 வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இதேபோல் இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 2022ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 2வது காலாண்டில் 7.9 சதவீதம், 3வது காலாண்டில் 6.8 சதவீதம், 4வது காலாண்டில் 6.1 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது.
இதேவேளையில் 2023ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 17.1 சதவீதமாக இருக்கும் கணித்துள்ளது
ரிசர்வ் வங்கி கருத்து
மேலும் நாட்டின் பொருளாதாரம் இதுநாள் வரையில் நிலையாக இல்லாமல் தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருப்பதால், நாட்டின் வளர்ச்சிக்கு இன்னமும் நாணய கொள்கை தளர்வுகள் தேவைப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொடுதல் சார்ந்த வர்த்தகம்
இந்தியாவில் அதிகமானோருக்கு கொரோனா வேக்சின் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் தொடுதல் சார்ந்த வர்த்தகத் துறைகள் இன்னமும் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
பணவீக்கம்
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2022ஆம் நிதியாண்டில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதேபோல் 2வது காலாண்டில் 5.1 சதவீதம், 3வது காலாண்டில் 4.5 சதவீதம், 4வது காலாண்டில் 5.8 சதவீதம் வரையில் உயரும் என ரிசர்வ் வங்கி பணவீக்க அளவீட்டைக் கணித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications