ரெப்போ விகிதம் 5.40% ஆக உயர்வு; FY23ல் பணவீக்கம் 6.7%, ஜிடிபி 7.2% - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) ரெப்போ விகித உயர்வு குறித்த முடிவை இன்று அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கியான ஆர்பிஐ இந்தியாவில் இரு்ககும் அதிகப்படியான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த உள்ளது.

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

இரு மாத நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் SDF விகிதம் 5.15 சதவீதத்தில் இருந்து 5.65 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் வங்கி விகிதமான MSF 5.65 சதவீதமாக உயர்வு - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்

 3வது முறை வட்டி உயர்வு

3வது முறை வட்டி உயர்வு

சர்வதேச சந்தை பாதிப்பால் இந்தியா முதலீடு சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது என பேசிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் 2022-23 ஆம் நிதியாண்டில் 3வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தியுள்ளார். ரெப்போ விகிதம் இன்றைய உயர்வுடன் ஆகஸ்ட் 2019 அளவை எட்டியுள்ளது.

ஜிடிபி விகிதம்

ஜிடிபி விகிதம்

2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதமாகவே இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஜிடிபி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஜிடிபி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

கடன் அளவு

கடன் அளவு

இந்தியாவில் மார்ச் 2019ல் இருந்த 21 சதவீத External debt to GDP ratio மார்ச் 2022 ல் 19.9 சதவீதமாக சரிந்துள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் 13.3 பில்லியன் டாலர் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியுள்ளது என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

பணவீக்கம்

பணவீக்கம்

2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ். இதேபோல் 2023ஆம் நிதியாண்டில் 2வது காலண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், 3வது காலாண்டில் பணவீக்கம் 6.4 சதவீதமாகவும், 4வது காலண்டில் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்

முக்கிய பிரச்சனை

முக்கிய பிரச்சனை

நடந்து கொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போர், சீனா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய தைவான் நெருக்கடிகள் ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவாலும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருவது மற்றொரு பெரும் பிரச்சனையாக உள்ளது.

0.50 சதவீதம்

0.50 சதவீதம்

ஆர்பிஐ இன்றைய முடிவில் 35 அடிப்படை புள்ளிகள் (bps) முதல் 50 bps வரையிலான ரெப்போ விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தடுமாற்றத்தைக் கூடிய 130 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது.

 நாணயக் கொள்கைக் குழு கூட்டம்

நாணயக் கொள்கைக் குழு கூட்டம்

ஆர்பிஐ இன்றைய இருமாத நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் (bps) முதல் 50 bps வரையில் உயர்த்தினால் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து இது மூன்றாவது உயர்வாக இருக்கும்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

இக்கொள்கை கூட்டத்திள் வட்டி விகிதங்கள் உயர்வு ஏறக்குறைய உறுதியான நிலையில், ஆய்வாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் விகிதம் உயர்வின் அளவு குறித்து வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அந்த கணிப்புகள் அனைத்தும் அடுத்த சில மணிநேரத்தியில் உறுதியாகும்.

 அமெரிக்கா, ஐரோப்பா

அமெரிக்கா, ஐரோப்பா

ஏற்கனவே அமெரிக்கா தனது பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில் பிரிட்டன், ஐரோப்பா உட்பட அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் வட்டியை உயர்த்த தயாராக உள்ளது. உலகில் அனைத்து நாடுகளும் பணவீக்கத்தை குறைப்பதை முக்கிய இலக்காக கொண்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+