கொரோனா தொற்று மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, வருமானம் இழப்பு, வர்த்தகச் செலவு, மருத்துவச் செலவு எனப் பல விதமான பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும், வங்கியில் கடன் வாங்கியவர்களுக்குக் கடந்த ஒரு வருடம் ஜாக்பாட் என்றால் மிகையில்லை.
ஆம் நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்காகவும், மக்களுக்குக் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைப் பெரிய அளவில் குறைத்துள்ளது. இதனால் பலருக்கு அதிகளவிலான நன்மை கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்று வெளியான ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவில் வட்டி உயர்த்தப்படுமா எனப் பலரும் பயந்த நிலையில், தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்தது போலவே வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ரெப்போ விகிதம் அதாவது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பணத்தைக் கடனாகக் கொடுக்கும் வட்டி விகிதம். இந்த ரெப்போ விகிதத்தை ஏற்கனவே நடைமுறையில் இருந்து 4 சதவீதம் அடுத்த 2 மாதங்களுக்கும் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி
இதேபோல் ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறப்படும் பணத்திற்கு அளிக்கப்படும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், இதேபோல் வங்கிகள் அளிக்கும் கடன்களின் வட்டி விகிதத்தை அடிப்படையாக நிர்ணயம் செய்யும் எம்எஸ்எப் விகிதம் 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீதம் என எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..? நன்மை..? என்பதைத் தான் எப்போது பார்க்கப்போகிறோம்.
ஹோம் லோன்
ரிசர்வ் வங்கி இன்று வட்டி விகிதத்தைக் குறைக்காத காரணத்தால் எந்த வங்கியும் தனது கடனுக்கான வட்டியைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யாது என்பது உறுதியானது.
இந்நிலையில் வீட்டு கடன் வாங்கியோருக்கு ரெப்போ விகிதம், MSF விகிதம், பேங்க் ரேட் ஆகியவற்றில் மாற்றம் செய்யாத நிலையில் வீட்டுக் கடன் வாங்கியோரின் ஈஎம்ஐ தொகையில் மாற்றம் இருக்காது.
இதேவேளையில், நீங்கள் இதுவரை வீட்டுக் கடன் வட்டியை ரெப்போ விகித அளவீட்டில் குறைவில்லை என்றால் உடனே ஹோம் லோன் வாங்கி வங்கியை அணுகிக் குறைக்க முயற்சி செய்யுங்கள். இந்த வட்டி குறைப்பிற்கு 800 ரூபாயில் இருந்து 1500 ரூபாய் செலுத்த வேண்டி வரும், இந்தத் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.
கார் மற்றும் பைக் லோன்
ஹோம் லோன் போலவே கார் மற்றும் பைக் லோனுக்கும் வட்டி குறைக்கப்படவில்லை என்பதால் ஈஎம்ஐ தொகை குறையவோ, கூடவோ வாய்ப்பு இல்லை.
கார் மற்றும் பைக் லோன் வட்டி அதிகமாக இருந்தால் தங்கம் நகைகளை வைத்து கடன் பெற்று இந்தக் கடனை அடைக்கலாம். இதனால் வங்கிகளுக்குச் செலுத்தும் வட்டியை ஒருவர் எளிதாகக் குறைக்க முடியும். தற்போது தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் அதிகப் பணம் கடனாகக் கிடைக்கும்.
கல்வி கடன்
கொரோனா மூலம் ரிசர்வ் வங்கி வட்டி குறைத்ததில் அதிகம் பலன் அடைவோர் மாணவர்கள் தான். +2 முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் அடுத்தச் சில மாதத்தில் கல்லூரி படிப்பை துவங்குவோருக்குத் தற்போது வங்கியில் வழக்கத்தை விடவும் குறைவான வட்டியில் கல்வி கடன் கிடைக்கும்.
வங்கியில் கிடைக்கும் கல்வி கடன் எவ்விதமான தயக்கமுமின்றி எப்படியாவது பெற்றுப் படித்துப் பெற்றுவிடுங்கள் மாணவர்களே. வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வர்த்தகக் கடன்
கொரோனா தொற்றில் இருந்து இந்தியச் சந்தை மீண்டு வரும் நிலையில் உற்பத்தி மற்றும் சேவைத் துறை நிறுவனங்கள் வர்த்தகம் முடங்கியிருந்தால் மீண்டும் துவங்கவும், வர்த்தக்தை விரிவாக்கம் செய்யவும், புதிதாக வர்த்தகத்தைத் துவங்கத் திட்டமிடுவோருக்கு இந்தக் குறைவான வட்டி விகிதம் பெரிதும் உதவியாக இருக்கும்.
MSME நிறுவன கடன்கள்
மத்திய அரசு இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்பைக் குறைந்த காலகட்டத்தில் உருவாக்கப் பெரிதும் நம்பியிருக்கும் துறை MSME. இப்பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை நடத்தவும், உற்பத்தி அளவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய நிதியமைச்சகம் பல சிறப்புக் கடன் திட்டங்களை மிகவும் குறைவான வட்டியில் அளித்து வருகிறது.
தற்போது ரிசர்வ் வங்கி வட்டி உயர்த்தாத பட்சத்தில் இந்தத் திட்டத்திற்கான வட்டிகள் உயராது.
வங்கி வைப்பு நிதி
ஏற்கனவே சொன்னது போல் கடந்த 1.5 வருடத்தில் ரெப்போ விகிதம் பெரிய அளவில் குறைந்த காரணத்தால் கடனுக்கான வட்டி பெரிய அளவில் குறைந்துள்ளது.
கடனுக்கான வட்டி குறைந்தது போலவே வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது. இதனால் வங்கி வைப்பு நிதி வருமானத்தை நம்பியிருக்கும் பல கோடி இந்தியர்களின் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளது. ரெப்போ விகிதம் உயர்ந்தால் மட்டுமே வைப்பு நிதியின் வட்டியும் உயர்வும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications