உலகளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் , இந்திய ரிசர்வ் வங்கி கூட்டமானது இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்த மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்றைய வட்டி அதிகரிப்பு என்பது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் இந்திய சந்தையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
பணவீக்க இலக்கு
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கான 2 - 6% மேலாகவே தொடர்ந்து பணவீக்கம் இருந்து வரும் நிலையில், கட்டாயம் இந்த முறையும் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதமானது 5.90% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லறை & உணவு பணவீக்கம்
சில்லறை பணவீக்க விகிதமானது கடந்த அக்டோபர் மாதத்தில் 6.77%% ஆக இருந்தது.. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 7.41% ஆக இருந்தது. இதே ஆகஸ்ட் மாதத்தில் 7% ஆக இருந்தது. இதே உணவு பணவீக்கமும் தொடர்ந்து மேலாகவே இருந்து வருகின்றது. இது பருவத்தில் அல்லாத மழை காரணமாக விவசாய பயிர்கள்பாதிக்கப்பட்டுள்ளது, அறுவடை பாதிப்பு காரானமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது, இது விலையேற்றத்திற்கும் தூண்டியுள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம்.
இன்னும் அதிகரிக்க தூண்டலாம்
கடந்த ஏப்ரல் 2022 முதல் ரிசர்வ் வங்கியானது 190 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை ஏற்றம் செய்துள்ளது. இது இந்த முறையும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பணவீக்கமும் இலக்கிற்கு மேலாக இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.
ரூபாய் மதிப்பு அதிகரிக்கலாம்
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது ரூபாயின் மதிப்பினை அதிகரிக்க தூண்டலாம். இது மேற்கொண்டு இந்திய சந்தையானது உச்சம் தொட மீண்டும் வழிவகுக்கலாம்.
ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் ரிசர்வ் வங்கியானது டிசம்பர் மாதத்தில் 6.15% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தை நிலவரம்?
தொடக்கத்தில் சற்றே தடுமாற்றத்தில் இருந்த இந்திய சந்தையானது தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் சென்செக்ஸ் 34.95 புள்ளிகள் அதிகரித்து, 62,660.46 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 3.25 புள்ளிகள் குறைந்து, 18,637.90 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications